Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » ஈர்க்கும் இடங்கள் » தால் கட்டோர் கீ கர்பாலா

தால் கட்டோர் கீ கர்பாலா, லக்னோ

59

தால் கட்டோர் கீ கர்பாலா எனும் இந்த அமைப்பு மீர் குடா பக்ஷ் என்பவரால் 1800ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. கர்பாலாவில் நடந்த புனித யுத்தத்தின் ஞாபகார்த்தச்சின்னமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த சின்னம் ஒரு அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. மூன்று கம்பீரமான மினாரெட்டுகள் மற்றும் மத்தியில் ஒரு பெரிய குமிழ் கோபுர அமைப்பு ஆகியவறோடு இந்த நினைவுச்சின்னம் காட்சியளிக்கிறது.

தற்போதைய நவீன கட்டிடக்கலை அம்சங்களுக்கு சவால் விடும் அளவுக்கு வடிவமைப்பு நுணுக்கங்களை இது கொண்டிருக்கிறது. ஹஸ்ரத் ஹுசேன் ரௌஸா எனும் ஷியா ஞானியின் கல்லறை இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளது.

மொஹர்ரம் திருநாளின்போது இந்த சன்னதிக்கு ஏராளமான ஷியா பிரிவு முஸ்லிம்கள் வருகை தந்து வழிபடுகின்றனர். அஷுரா சடங்கு நிகழ்ச்சியின் 10 வது நாளில் இங்கு ஒரு துக்க ஊர்வலமும் நடத்தப்படுகிறது.

அச்சமயம் பக்தர்கள் தசியா எனப்படும் இமாம் ஹுசேன் கல்லறை அல்லது அதன் மாதிரி அமைப்பிலிருந்து தங்கள் ஊர்வலத்தை துவக்குகின்றனர். பின்னர் அவர்கள் தால் கட்டோர் கி கர்பாலாவிற்கு கொண்டு வரப்படுகின்றனர்.

மேலும், குழந்தைகள் ஷா நஜ்தஃப் இமாம்பாரா கொடிக்கம்பத்திற்கு அருகில் மெழுகுவர்த்தி ஏற்றியும் வணங்குகின்றனர். அஷுரா சடங்கின் 10 நாட்களிலும் இமாம்பாரா சாலையில் உணவு சமைக்கப்பட்டு எல்லா பக்தர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Jun,Fri
Return On
13 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Jun,Fri
Check Out
13 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Jun,Fri
Return On
13 Jun,Sat