Search
  • Follow NativePlanet
Share

மதுபானி - அழகிய நிறங்களின் பிரகாசமான வாழ்க்கை!

9

மதுபானி என்ற வார்த்தையை நீங்கள் உச்சரிக்கும் பொழுது உங்கள் மனதானது கலாச்சாரத்தின் அடிப்படையில் உலகின் அழகான மதுபானி கலை படங்களை நினைத்துக் கொள்ளும். மதுபானி மாவட்டமானது டார்ப்ஹங்கா பிரிவின் ஒரு பகுதியாக உள்ளது.

மதுபானி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

மதுபானி சுற்றுலாவில் ஜைநகர், ஸௌரத், கபிலெஸ்வர்ஸ்த்ஹன், பவானிபூர், ஜ்ஹனிஜ்ஹர்புர், மற்றும் புஹுல்லஹர் போன்றவை மிக முக்கிய இடம் வகிக்கின்றன.

மதுபானி வரலாறு!

மதுபானியின் தோற்றமானது டார்ப்ஹங்கா மாவட்டத்தில் இருந்து தொடங்குகின்றது. டார்ப்ஹங்கா மாவட்டம் 1972-ம் ஆண்டுவாக்கில் உருவாக்கப்பட்டது. பல இலக்கிய மேதைகள் இங்கே பிறந்துள்ளனர்.

மதுபானி என்கிற வார்த்தையானது மது மற்றும் பானி என்கிற இரு ஹிந்தி வார்த்தைகளின் தொகுப்பாகும். மது என்பதற்கு இனிப்பு என்றும்  வாணி / பானி என்பதற்கு குரல் என்றும் பொருள்.

இங்கு வசித்த மக்களுக்கு அந்த இனிமையான மற்றும் இனிப்பு மிகுந்த குரல் இருந்திருக்க வேண்டும். இங்குள்ள மக்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உருது போன்ற மொழிகளில் நன்கு பரிச்சயம் இருந்தாலும், இங்கு பேசப்படும் மிக முக்கிய மொழியாக மித்ஹில்ல திகழ்கின்றது.

இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கோவில்கள் மற்றும் புனித வடிவத்தில் மிகப் பெரிய தொல்லியல் மற்றும் மத பொக்கிஷங்கள் உள்ளன.

சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் இந்த இடத்திற்கு வருகை புரிகின்றனர். மதுபானியில்  ஆரம்ப இடைக்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் எச்சங்களை பார்க்க முடியும்.

மதுபானியின் வளமான பண்பாடு!

நூற்பு மற்றும் நெசவு போன்றவை மித்ஹிலன் கைவினையின் மிக முக்கியமான அம்சங்கள் ஆகும். மேலும் மித்ஹிலன் கைவினைப் பொருட்கள் தேசம் முழுதும் பிரபலமாக உள்ளன.

பொதுவாக இந்த கைவினைப் பொருட்கள் பெண்களால் உருவாக்கப்பட்டாலும், இப்பகுதியின் கைவினை பொருட்களின் தரத்திற்கு இங்கு நெய்யப்படும் கைத்தறி நெசவு துணிகள் சான்றாக உள்ளன.

மதுபானி சுற்றுலாவானது  தொல்பொருட் பொக்கிஷங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. மதுபானி பாணியிலான ஓவியங்கள் காய்கறி சாயங்கள் மற்றும் விளக்கு கரி கொண்டு வரையப்படுகின்றன.

இங்கு பயன்படுத்தப்படும் கேன்வாஸானது காகிதம் கொண்டு செய்யப்பட்டாலும் சில சமயங்களி துணி கேன்வாஸும்  சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. மதுபானி லோக்ஹீட் இந்தப் பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

மதுபானி சுற்றுலாவின் பிற முக்கிய அம்சங்கள்

மதுபானி சுற்றுலா இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனதை மயக்குகின்றது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தின் அழகு மற்றும் பாரம்பரியத்தை என்றும் மறக்க இயலாது.

மதுபானி சுற்றுலாவானது சுற்றுலா பயணிகளூக்கு  ஒரு கண்கவர் மற்றும் சிறந்த சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது. ஆகவே இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாழ்வில் மீண்டும் ஒரு முறை இங்கு சுற்றுலா வருவதற்கு கண்டிப்பாக முயற்சி செய்வார்கள்.

இங்குள்ள பகவதி மற்றும் உகர்நாத் கோவில்கள் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இன்றைய தேதி வரை இவை இரண்டும் சுற்றுலா பயணிகளை மதுபானி நோக்கி ஈர்க்கும் மிக முக்கிய சுற்றுலா தளங்களாக விளங்குகின்றது.

மதுபானி வானிலை

மதுபானி காலநிலையாது மிகவும் ஈரமான மற்றும்  துணை வெப்பமண்டல காலநிலையை பெற்றிருக்கின்றது. மதுபானிக்கு வருகை புரிந்தால் உங்களின் சுவை மொட்டுகள் விழித்துக் கொள்ளும்.

இங்கு நீங்கள் நன்னீர் மீன்கள் மற்றும் மக்ஹன போன்றவற்றை சுவைத்து மகிழலாம். இங்கு சாத் திருவிழா மிக விமர்சையாகச் கொண்டாடப்படுகின்றது. 

மதுபானி சிறப்பு

மதுபானி வானிலை

சிறந்த காலநிலை மதுபானி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மதுபானி

  • சாலை வழியாக
    மதுபானி சாலை மூலம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மதுபானியை மிக எளிதாக பேருந்துகள் மூலம் மிகக் குறைந்த செலவில் அடையலாம். மதுபானிக்கு அருகில் உள்ள நகரங்களில் இருந்து பேருந்துகள் சீரான இடைவேளியில் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மதுபானியில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. மேலும் மதுபானிக்கு அருகில் உள்ள நகரங்களில் இருந்து மற்றும் புது தில்லி, அமிர்தசரஸ், ஜெயநகர், மற்றும் ஸஹ்ரஸ போன்ற நகரங்களுடன் ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஷாகீத் எக்ஸ்பிரஸ் மற்றும் கங்காஸாகர் எக்ஸ்பிரஸ் மதுபானிக்கு இயக்கப்ப்டும் மிகப் பிரபலமான ரயில்கள் ஆகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மதுபானிக்கு அருகில் கவுகாத்தி விமான நிலையம் உள்ளது. மதுபானிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து மதுபானியை மிக எளிதாக அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu