கடல் மட்டத்திலிருந்து 2501 மீ உயரத்தில் உள்ள இந்த ரஹாலா ஃபால்ஸ் மணாலியிலிருந்து 16 கி.மீ தூரத்தில் ரோஹ்தங் பாஸ் பாதையின் துவக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.
பனிமலைகளிலிருந்து வரும் நீர் இந்த நீர்வீழ்ச்சிக்கு தொடர்ந்த நீர்வரத்தை அளிக்கின்றன. செங்குத்தான பாறைகளின் மீது இந்த அற்புதமான நீர்வீழ்ச்சி சரிகிறது. சுற்றிலும் பிர்ச் மரங்கள் மற்றும் தேவதாரு மரங்கள் நிறைந்த காடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி ஏகாந்தமான சூழல் மற்றும் தூய்மையான இயற்கை அழகுடன் ஒளிர்கிறது.
மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலம் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. நீர்வீழ்ச்சியின் பின்னணியில் பனிபோர்த்திய சிகரங்கள் வானோங்கி நிற்பது பிரமிக்கவைக்கும் காட்சியாகும். மணாலியிலிருந்து 20 நிமிட பஸ் அல்லது டாக்சி பயணத்தில் இந்த நீர்விழ்ச்சிப்பகுதியை பயணிகள் அடையலாம்.



Click it and Unblock the Notifications