Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணாலி » ஈர்க்கும் இடங்கள் » வஷிஷ்ட் கிராமம்

வஷிஷ்ட் கிராமம், மணாலி

71

மணாலியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றான இந்த வஷிஷ்ட் கிராமம் இங்குள்ள மணற்பாறை கோயில்கள் மற்றும் இயற்கை நீருற்றுகளுக்கு பெயர்பெற்று விளங்குகிறது.

மணாலியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் ராவி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள இயற்கை நீரூற்றுகளுக்கு தோல்வியாதிகளை குணமாக்கும் சக்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஹிந்து புராண ஐதீகங்களின்படி இங்குள்ள வென்னீர் ஊற்றுகள் ராமனின் சகோதரனான லட்சுமணனால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆன்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான குளியல் துறைகள் இந்த நீரூற்றுப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. நகர மையத்திலிருந்து இந்த வெந்நீர் குளியல் கூடங்களுக்கு 10 நிமிட நடைப்பயணத்தில் பயணிகள் சென்றடையலாம். மரவுரி தரித்த ஒரு ரிஷியின் சிலையுடன் காணப்படும் கோயில் ஒன்றும் இந்த ஊற்றுகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

கால குருவுக்கான கோயில் மற்றும் விஷ்ணுவின் எழாவது அவதாரமாக கருதப்படும் ராமனுக்கான கோயில் ஆகியவை இந்த கிராமத்தின் இதர ஆன்மிக யாத்திரை அம்சங்களாக அமைந்துள்ளன. ராமர் கோயிலில் ராமபிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணன் ஆகியோரின் சிலைகளைக் காணலாம்.

வழங்கி வரும் கதைகளின்படி, ஹிந்து புராணிக மரபின் ஏழு முக்கிய ரிஷிகளில் ஒருவராக கருதப்படும் வசிஷ்டர் தனது குழந்தைகள் விசுவாமித்திர முனிவரால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற சோகத்தில் ஒரு ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவர் ஆற்றில் அடித்துவரப்பட்டு இந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

பின்னர் இந்த கிராமத்திலேயே அவர் தனது புதிய வாழ்க்கையை தொடங்கினார் என்பதாக அந்த கதை முடிகிறது. வசிஷ்ட முனிவரை இந்த கிராமத்துக்கு இழுத்து வந்த ஆறு விபாஷா என்று அழைக்கப்படுகிறது. விபாஷா எனும் சொல்லுக்கு ‘தளைகளிலிருந்து விடுதலை’ என்பது பொருளாகும். அந்த விபாஷா ஆறுதான் இன்று பியாஸ் ஆறு என்றழைக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed