பூதநாதர் கோயில் ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள மண்டி நகரத்தின் மையப்பகுதியிலேயே வீற்றிருக்கிறது. 1527ம் ஆண்டு ராஜா அஜ்பேர் சேன் என்பவரால் இது கட்டப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகளின்படி தெரியவருகிறது.
பியுலி எனும் நகரத்திலிருந்து இந்த மண்டி நகரத்துக்கு ராஜ்ஜிய தலைநகரம் மாற்றப்பட்டபோது இங்கு அழிப்புச்சக்திக்கான கடவுளாகிய சிவபெருமானுக்காக இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
புராணக்கதைகளின்படி மண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜ் மாதவ் எனும் தெய்வம் மற்ற மலை தெய்வங்களோடு இந்த கோயிலுக்கு விஜயம் செய்தபின் சிவராத்திரி பண்டிகை ஊர்வலத்தை துவங்குவதாக சொல்லப்படுகிறது.
இந்த பண்டிகை கோலாகலமாக ஒரு வார காலத்திற்கு இப்பகுதியில் கொண்டாடப்படுகிறது. 100 உள்ளூர் தெய்வங்கள் இந்த திருவிழா ஊர்வலத்தில் கலந்து கொள்வதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications