குருத்வாரா கோபிந்த்சிங் எனப்படும் இந்த குருத்வாரா 10வது சீக்கிய குருவான கோபிந்த்சிங் அவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இவரது வழிகாட்டலின் கீழ் சீக்கிய இனத்தார் ஒற்றுமையாக முகாலய அரசர் ஔரங்கசீப்பை எதிர்த்து போரிட்டுள்ளனர்.
இந்த போரின்போது குரு கோபிந்த்சிங் அவர்களுக்கு இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் முழு ஆதரவை அளித்துள்ளனர். பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த குருத்வாராவானது பலாங் சஹாபஸ் குருத்வாரா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
குரு கோபிந்த்சிங் படுத்து உறங்கிய கட்டில் ஒன்றும் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர ரபாப் எனும் ஒரு இசைக்கருவி, ஒரு துப்பாக்கி மற்றும் குரு கோபிந்த்சிங் பயன்படுத்திய ஒரு துப்பாக்கி குப்பி போன்றவையும் இந்த பாதுகாக்கப்படுகின்றன.
மருத்துவக்குணங்கள் நிரம்பியதாக நம்பப்படும் ஒரு தீர்த்தக்குளம் ஒன்றும் இந்த குருத்வாராவுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மேலும் இந்த குருத்வாராவைப்பராமரிக்கும் பொறுப்பு இன்றும் ராஜகுடும்பத்தார் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications