கம்ரு நாக் கோயில் மண்டி மாவட்டத்தில் கம்ரு நாக் மலையில் உள்ள கம்ராஹ் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. மழைக்கடவுள் என்றழைக்கப்படும் கம்ரு நாக் தெய்வத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் எராளமான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.
ஒவ்வொரு ஜுன் மாதத்தின் 14ம் தேதியில் இங்கு ஒரு சந்தைத்திருவிழாவும் நடத்தப்படுகிறது. உள்ளூர் மரபுப்படி பக்தர்கள் பண நோட்டுகள், நாணயங்கள் மற்றும் நகைகள் போன்றவற்றை கடவுளுக்கான அர்ப்பணமாக இங்கு கோயிலுக்கு அருகேயுள்ள கம்ரு நாக் ஏரி அல்லது குமர்வாஹ் ஏரியில் வீசுவது வழக்கமாக உள்ளது.



Click it and Unblock the Notifications