சிவனுக்காக கட்டப்பட்டுள்ள இந்த மஹாமிருத்யுஞ்சியா கோயிலில் தனித்தன்மையான விக்கிரகத்தை காணலாம். தனது மூன்றாவது கண் திறந்திருக்கும் நிலையில் சிவபெருமான் ஒரு தாமரை மலரின் மீது வீற்றிருப்பதை போன்று இந்த விக்கிரகம் வடிக்கப்பட்டிருக்கிறது.
நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் இந்த சிலையின் மேல் வலது கரம் ஆசிர்வதிப்பது போன்றும், மேல் இடது கரம் அமிர்த திரவம் கொண்ட ஒரு பாத்திரத்தை ஏந்தியும், கீழ் வலதுகரம் பூமிஸ்பார்ஷ முத்திரையுடனும், கீழ் இடது கரம் நீரை கொண்ட கமண்டலத்தை தாங்கியிருப்பது போன்றும் காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications