மண்டி மாவட்டத்தில் உள்ள சிண்டி எனும் இடத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் இந்த மாம்லேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. இது அழிவுக்கடவுளான சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள கோயிலாகும்.
இந்த கோயிலில் கல்லில் வடிக்கப்பட்ட ஆன சிவன் சிலை காணப்படுகிறது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த கோயிலில் அழகாக மரத்தில் குடையப்பட்ட தூண்கள் காணப்படுகின்றன.
ஆறு அடி உயர முரசு, 250கிராம் எடையுள்ள ஒரே ஒரு கோதுமை தானியம் போன்றவை இக்கோயிலில் உள்ள இதர விசேஷ அம்சங்களாகும். புராணக்கதைகளின்படி, இந்த கோயில் பாண்டவர்களால் வனவாசத்தின்போது கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications