ஷிகாரி தேவி சரணாலயம் மண்டி மாவட்டத்தில் ஷிகாரி தேவி கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இது 1962ம் ஆண்டில் காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சரணாலயத்தில் பலவகையான விலங்குகளும் பறவைகளும் வசிக்கின்றன. கோரல் எனும் ஒருவகை காட்டு ஆடு, மோனல் பறவை, கருப்பு கரடி, குரைக்கும் மான், கஸ்தூரிமான், சிறுத்தைப்பூனை மற்றும் ஹிமாலயன் கருப்பு கரடி போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
மேலும், ஹிமாலயன் புனுகுப்பூனை, இந்திய முள்ளம்பன்றி, காஷ்மீரி பறக்கும் அணில், லாங்குர் குரங்கு, காட்டு அணில், பனிச்சிறுத்தை மற்றும் மார்டென் போன்ற விலங்குகளும் இங்கு வசிக்கின்றன.
இந்த சரணாலயத்தில் பலவகையான மேற்கத்திய ஊசியிலை மரங்கள், கர்சு ஓக் மரங்கள், மேற்கு இமாலய ஓக் மரங்கள், ஈரப்பதம் நிரம்பிய இலையுதிர்காடுகள் மற்றும் அல்பைன் புல்வெளிகள் ஆகியவை நிரம்பியுள்ளன.
இந்த சரணாலயத்தை விஜயம் செய்ய ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையான மாதங்களும், ஏப்ரல் முதல் மே வரையான மாதங்களும் பொருத்தமாக உள்ளன. கர்சோக் எனும் இடத்திலிருந்து சிண்டி வழியாக இந்த சரணாலயப்பகுதிக்கு வரலாம்.



Click it and Unblock the Notifications