மண்டியிலிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சுந்தர்நகர் இங்குள்ள பிரசித்தமான மஹாமாயா கோயில் மற்றும் சுக்தேவ் வாடிகா போன்ற கோயில்களை உள்ளடக்கிய பல பிரசித்தமான கோயில்களுக்கு புகழ் பெற்று விளங்குகிறது.
இந்த பகுதி சுகேத ராஜ்ஜியம் என்று அந்நாளில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. மண்டி மாவட்டத்தின் முனிசிபல் கவுன்சில் அலுவலகமும் இப்பகுதியில்தான் அமைந்துள்ளது.
861 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் பியாஸ் சட்லெஜ் ஹைடல் புராஜெக்ட் எனும் ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்மின்னுற்பத்தி நிலையத்திற்காக பிரசித்தி பெற்றுள்ளது. வட இந்திய சமவெளிப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன ஆதாரமாகவும் இந்த அணைத்திட்டம் பயன்படுகிறது.



Click it and Unblock the Notifications