கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் மண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த தர்ணா ஹில் எனும் சுற்றுலாத்தலம் இங்கு நகரி பாணியில் கட்டப்பட்டிருக்கும் பல கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இந்த கோயில்களில் பெரும்பாலானவை 15 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கின்றன.
இவற்றில் மிகப்பிரசித்தமான இரண்டு கோயில்களான திரிலோக்நாத் கோயில் மற்றும் ஷியாமா காளி கோயில் ஆகியவை முறையே 15ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டிருக்கின்றன. ராணி அம்ரித் கௌர் பார்க் எனும் பிரசித்தமான பூங்கா ஒன்றும் இங்கு 1957ம் ஆண்டு தலாய் லாமாவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications