நம்ப்ரிக்டாங்கில் உள்ள லெப்சா பிரிவினரின் பாரம்பரிய வீட்டைப் போல ரோங் லுங்டென் லீ காட்சியளிக்கிறது. இந்த இடம் மங்கன் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. லெப்சா இனத்தவரின் அரிய தொல்பொருட்கள் இந்த வீட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த வீடு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் கூரைப்பகுதி 'சிறிய பரண்' என்று பொருள் தரும் 'போடோங்' என்று அழைக்கப்படுகிறது.
பார்வையாளர்களுக்காக மதிப்பு வாய்ந்த கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கும் இடமாக இது உள்ளது. வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கும் இந்த வீட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கிறார்கள்.
கனகா மற்றும் டீஸ்டா ஆகிய இரு நதிகள் கூடுமிடத்தில் நம்ப்ரிக்டாங் அமையப்பெற்றுள்ளது. இந்த இடத்திலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அழகு பாராட்டத்தக்கது.



Click it and Unblock the Notifications