மணிப்பூர் சுற்றுலா – ஒரு சிறப்பு முன்னோட்டம்!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

உலகம் முழுமையும் சுற்றித்திரிய விரும்புபவர்களுக்கும், சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் மணிப்பூரில் தனித்தன்மையான அனுபவங்கள் ஏராளம் காத்துக்கிடக்கின்றன. ஷிருயி லில்லி, சங்காய் மான்கள், லோக்டாக் ஏரியில் மிதக்கும் தீவுகள், முடிவில்லாத பசுமை விரிப்புகள் , அதன் மிதவெப்பமான பருவநிலை மற்றும் பழங்குடியினங்கள் ஆகியவை இந்த வடகிழக்கு மாநிலத்தின் தனித்துவமான வியக்கத்தக்க குணாதிசயங்களாக உள்ளன.

இந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணம் வருவது உங்களுக்கு ஆர்வமூட்டுவதாகவும், மிகவும் விருப்பமானதாகவும் இருக்கும்.மணிப்பூரின் வடக்கில் நாகலாந்தும், தெற்கில் மிஸோரமும், மேற்கில் அஸ்ஸாமும் மற்றும் கிழக்கில் பர்மாவும் எல்லைகளாக விளங்குகின்றன.

மணிப்பூரிலுள்ள ஆர்வமூட்டக் கூடிய சுற்றுலா தலங்கள்!

மணிப்பூரின் தலைநகரம் இம்பால் கண்கவரும் இயற்கையழகு மற்றும் வனவிலங்குகளை காண ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாகும். புகழ் பெற்ற போலோ விளையாட்டின் தாயகம் இம்பால் என்பதை அறியும் போது உங்களின் புருவம் ஆச்சரியமாக உயருவதை தவிர்க்க முடியாது.

மேலும், இம்பாலில் எண்ணற்ற பழமையான நினைவுச் சின்னங்கள், கோவில்கள் மற்றும் வரலாற்று சின்னங்களும் உள்ளன. இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற இம்பால் போர் மற்றும் கோஹிமா போர்களினால் இம்பாலின் பெயர் சரித்திரத்தில் இடம்பெற்றது.

இவை மட்டுமல்லாமல் மேலும் பல சுற்றுலாதலங்களையும் தன்னகத்தே கொண்டு, மணிப்பூர் மாநிலம் சுற்றுலாவில் பெரும்பங்கு வகிக்கிறது. ஸ்ரீ கோவிந்தாஜீ கோவில், காங்லா அரண்மனை, போர் கல்லறைகள், இமா கெய்தெல் என்ற பெண்களால் மட்டுமே நடத்தப்படும் சந்தை, இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் இங்கிருக்கும் சில கண்கவரும் தோட்டங்கள் ஆகியவை இவ்விடத்தை சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற பகுதியாக வைத்திருக்கின்றன.

மியான்மர் நாட்டின் நுழைவாயிலாக இருக்கும் சன்டெல் என்ற மாவட்டமும் மணிப்பூர் மாநில சுற்றுலாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. மாறுபட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளையுடை சன்டெல் மற்றும் தெமங்லாங் மாவட்டங்கள் மணிப்பூரின் உயிர்-பன்முகதன்மைக்கு எடுத்துக் காட்டுகளாக திகழ்கின்றன.

சன்டெலில் உள்ள மோரெ மணிப்பூரின் பிரசித்தி பெற்ற வணிக மையமாகும். மேலும், தெமங்லாங்கில் நடத்தப்படும் ஆரஞ்சு திருவிழாவும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் ரசனைக்கேற்ப நடத்தப்படும் சுவைமிகுந்த பழத் திருவிழாவாக அறியப்படுகிறது.

தனித்தன்மையுடன் சிறு சிறு கிராமங்களை குழுக்களாக கொண்டிருக்கும் சேனாபதி மணிப்பூரின் சுற்றுலாவை பெருமைப்படுத்தும் இடமாக உள்ளது.

வரலாற்றைப் பேசிக்கொண்டிருக்கும் மரம் குல்லென், மக்ஹெல் மற்றும் லாங்குல்லென் ஆகிய இடங்களும், மணிப்பூரின் மாநிலத்தின் நுழைவாயிலாக இருக்கும் மாவோ மற்றும் டாவ்டு நிலமாக இருக்கும் புருல் ஆகிய விளையாட்டுக்களும் மணிப்பூரின் அடையாளங்களாக விளங்குகின்றன.

ஏரிகள், தோட்டங்கள் மற்றும் சிகரங்கள் மற்றும் பல...

உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் ஏரியான பிஷ்னுபூரின் லோக்டாக் ஏரி புமிடிஸ் அல்லது மீனவர்கள் வசிக்கும் மிதக்கும் தீவுகளுடன் மணிப்பூரின் மதிப்பு வாய்ந்த சுற்றுலா தலமாக உள்ளது.

லோக்டாக் ஏரியில் உள்ள சென்ட்ரா தீவு சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்க்கப்பட்ட இடமாகும். இந்த ஏரியிலிருந்து தெரியும் கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்காவில் பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரினமான சங்காய் மான்களையும் சுற்றுலாப் பயணிகள் பார்த்திட முடியும்.

தெமங்லாங் மாவட்டத்திலுள்ள ஸெய்லாட் ஏரி கண்கவரும் சுற்றுச் சூழலுடனும் மற்றும் சாகசம் செய்ய தூண்டுவதாகவும் உள்ள அதே வேளையில், தௌபல் மாவட்டத்தில் உள்ள வைய்தௌல் ஏரியும் சிறப்பு மிக்க காட்சிகளை காட்ட வல்லதாக உள்ளது.

மணிப்பூரின் விவசாய மாவட்டமான தௌபல் கண்கவரும் நெல் வயல்களை அதன் அப்பழுக்கில்லாத தெளிந்த அழகின் ஒரு பகுதியாக கொண்டிருக்கிறது.

ஐகோப் ஏரி, லௌசி ஏரி, பும்லென் ஏரி ஆகியவை தௌபல் மாவட்டத்திலுள்ள மற்ற சில ஏரிகளாகும். உக்ருள்-ல் உள்ள காசௌபுங் ஏரியின் இயற்கையாகவே உருவாகியுள்ள நீர்ப்பரப்புகளாக அதன் அருகிலுள்ள காயாங் நீர்வீழ்ச்சி உள்ளன.

சூரசந்த்பூரில் இருக்கும் ங்கலாய் நீர்வீழ்ச்சி மற்றும் குகா அணைக்கட்டு ஆகிய இடங்களும் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடங்களாக அறியப்படுகின்றன.

உக்ருள்-ல் இருக்கும் ஷிருய் காசுங் சிகரத்தில் ஷிருய் லில்லி பூக்கள் கோடைகாலத்தில் பூத்துக் கிடப்பது கண்கவரும் காட்சியாக இருக்கும் அதே நேரத்தில், சன்டெலில் உள்ள புனிங் (N-பியுலாங்) புல்வெளிகளும் அதன் மேடுபள்ளமான மற்றும் முடிவில்லாத புல்வெளிகள் வானுடன் கலக்கும் வியக்க வைக்கும் காட்சிகளும், அந்த புல்வெளி முழுமையும் காட்டு லில்லி பூக்கள் மற்றும் ஆர்கிட் பூக்கள் கோடைக்காலத்தில் பூத்து கிடப்பதை காண்பதும் மறக்க முடியாத காட்சிகளாக உங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.

எனவே, சுற்றுலாப் பயணங்களைப் பொறுத்த வரையில், மணிப்பூரில் உள்ள இடங்கள் உங்களுக்கு வேண்டியதை தாராளமாக அள்ளிக்  கொடுக்கும் வல்லமை பெற்ற இடங்களாகும்.

Please Wait while comments are loading...