இந்த ஹார்ட் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளம் மாத்தேரான் ஸ்தலத்தை சுற்றியும் உள்ள அமைதியான கிராமங்கள் மற்றும் இயற்கை எழிலை ரசிக்க ஏதுவாக உள்ளது. முக்கிய சுற்றுலா அம்சமான இது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், மும்பை இரவு வெளிச்சம் போன்றவற்றையும் உயரத்திலிருந்து ரசிக்கும் விதத்தில் உள்ளது.
சேதமடையாத இயற்கை எழில் மற்றும் அமைதியுடன் காட்சியளிக்கும் இந்த மலைக்காட்சிதளப்பகுதி நகரச்சந்தடிகளுக்கே பழகிய பயணிகளை சாந்தப்படுத்தி மன அமைதியைத்தரும் மகத்தான சக்தியை கொண்டதாக உள்ளது. உங்கள் அன்புக்குரிய துணையுடன் அல்லது ஏகாந்தமாக தனிமையில் கழிக்க ஏற்ற இடம் இந்த ஹார்ட் பாயிண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications