Search
  • Follow NativePlanet
Share

மாயாபூர் - ஆன்மீக தலைநகர்!

8

மாயாபூர் என்கிற சொல் மேற்கு வங்க மாநிலத்தின் ஆன்மீகத் தலைநகர் என்பதை குறிப்பால் உணர்த்துகின்றது. மேலும் மாயாபூர், தான் ஒரு ஆன்மீக நகர் என்பதை தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்படுத்துகின்றது. இங்குள்ள இஸ்கான் ஆலயம் பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை தன்னுள் ஈர்த்து வருகின்றது.  அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் (ISCON) என்பது ஆன்மீக ஆர்வலர்கள் நெருங்கி பின்னப்பட்ட ஒரு குழுவாகும்.

இஸ்கானைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், உதவி முயற்சிகள் மற்றும் பூஜைகளை ஏற்பாடு செய்து விமர்சையாக கொண்டாடுகின்றனர். இங்கு துர்கா பூஜா, தீபாவளி, தசரா, மற்றும் காளி பூஜை போன்ற விழாக்கள் வெகு விவர்சையாக கொண்டாடப்படுகின்றது.

இஸ்கான் பக்தர்களின் தீவிர செயல்பாட்டின் காரணமாக இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். இஸ்கான் மாயாபூரை தலைமையமாக தேர்ந்தெடுத்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

வேற்றுமையில் ஒற்றுமை!

மாயாபூர் கங்கை நதிக் கரையில், கங்கையும் ஜாலங்கி நதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரமே சைதன்ய மஹாபிரபுவின்  பிறப்பிடமாக அறியப்படுகின்றது. பொதுவாக சைதன்ய மஹாபிரபு பகவான் கிருஷ்ணரின் அவதாரமாக கருதப்படுகின்றார்.

இங்குள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சுவாரஸ்யமான மற்றும் இப்போது அடங்கியுள்ள ஒரு மோதல் என்பது இந்த நகரை எவ்வாறு அழைப்பது என்பதாகும்.

இந்த நகரத்தை மியாபூர் எனறு அழைப்பதா அல்லது மாயாபூர் என்று அழைப்பதா என்கிற பிரச்சனை ஆண்டாண்டு காலமாக இருந்து வருகின்றது.

வரலாற்று சிறப்பு மிக்க மாயாபூரில் இன்றும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் இந்துக்களுடன் இணக்கமாக ஒருங்கிணைந்து ஒன்று சேர்ந்து வாழ்வது ஒரு வரவேற்கத்தக்க விஷயமாகும்.

இங்கு இஸ்கான் நிறுவனரான ஸ்ரீல பிரபு பாதாவின் சமாதி உள்ளது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த பிருந்தாவனத்திற்கு கண்டிப்பாக விஜயம் புரிய வேண்டும்.

மாயாபூரின் பாரம்பரிய உணவு வகைகள்

மாயாபூரின் குறிப்பிடத்தக்க அம்சம் அதனுடைய பாரம்பரிய உணவு வகைகள் ஆகும். சைவ உணவுப் பிரியர்களுக்கான சொர்க்க பூமி இது.

இங்கு வரும் பயணிகள் இங்குள்ள சிறு உணவகங்கள் மற்றும் உள்ளூர் கடைகளில் ருசிமிக்க பெங்காலி உணவுகளை சுவைத்து மகிழலாம். தெரு கலாச்சாரம் மாயாபூரில் மிகப் பிரபலமானது. இங்குள்ள ஷாப்பிங் வாய்ப்புகள் குறிப்பாக பாரம்பரிய மற்றும் சில்லறை வணிகங்கள் மிகவும் பிரபலமானது.  

மேற்கு வங்காளத் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து சுமார் இரண்டரை மணி நேர பயணத்தில் உள்ள மாயாபூர் ஒன்று அல்லது இரண்டு நாட்களை கழிப்பதற்குரிய ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்.

இது ஹூக்ளி உட்பட பிற மேற்கு வங்க நகரங்களுக்கு மிக அருகில் உள்ளது. மாயாபூரை ஹுலர் காட்டில் இருந்து படகு மூலமும் அணுக முடியும்.

மாயாபூர் சுற்றுலாவிற்கான சிறந்த பருவம்

இங்கு குளிர்காலத்தில் லேசான மற்றும் இனிமையான வானிலை நிலவுகிறது. எனவே மாயாபூருக்கு சுற்றுலா செல்ல குளிர்காலமே மிகவும் சிறந்தது.

மாயாபூர் சிறப்பு

மாயாபூர் வானிலை

சிறந்த காலநிலை மாயாபூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மாயாபூர்

  • சாலை வழியாக
    மாநில நெடுஞ்சாலை 6 கொல்கத்தாவை மாயாபூருடன் இணைக்கிறது. மாயாபூர் கொல்கத்தாவில் இருந்து சுமார் 144 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கொல்கத்தாவில் இருந்து மாயாபூரை அடைவதற்கு வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொல்கத்தா ரயில் நிலையம் (ஹவுரா) மாயாபூரில் இருந்து சுமார் 133 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஹவுரா ரயில் நிலையம் மேற்கு வங்க மாநிலம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளோடு ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மாயாபூருக்கு அருகில் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ்சந்ரா சர்வதேச விமான நிலையம் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue