மீரட்டின் கடிகார கோபுரம் 20-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடமாகும். உள்ளூரில் இந்த இடம் கான்டா கார் (Ghanta Ghar) என்றும் அழைக்கப்படுகிறது.
பழைய ஷாம்பு தர்வாஸா இருக்குமிடத்தில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது. நகரத்தின் மையத்தில் கச்சிதமாக அமைந்திருக்கும் இந்த இடம் தான், மீரட் நகரத்தின் ஸீரோ பாயிண்ட் ஆகும்.
சிவந்த மணற்கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிடம், இந்தியாவில் ஆங்கிலேயர்களின் தாக்கத்தை எடுத்துச் சொல்வதாக இருக்கும்.
அவ்வப்போது பலரும் சந்திக்கும் இடமாக இருக்கும் இந்த கடிகார கோபுரம், மீரட் நகரத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.



Click it and Unblock the Notifications