மீரட் நகரத்தின் மத்தியில் உள்ள முதன்மை சாலையில் காந்தி பாக் என்ற பூங்கா அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளின் மாலையிலும் இங்கு எழும் இசை நீரூற்றை ரசிப்பதற்காகவே 'கம்பெனி தோட்டம்' என்று அழைக்கப்படும் இந்த பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பெருந்திரளாக வருவார்கள்.
இந்த பூங்கா மகாத்மா காந்தியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த பரந்த நிலப்பகுதியுடைய பூங்கா உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகள் சுற்றிப் பார்க்கவும் மற்றும் நடந்து செல்லவும் எப்பொழுதும் திறந்து விடப்பட்டிருக்கும்.
இது பெரும்பாலும் பொதுக்கூட்டங்கள், சந்திப்புகள் நடத்தப்படும் இடமாகவும், நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விலகி அமைதி மற்றும் நிம்மதியுடன் இருக்க ஏற்ற இடமாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications