போர்டும்சா எனும் இந்த சிறிய நகரம் அருணாசல பிரதேச மாநிலத்தில் சங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 150 மீ உயரத்தில் உள்ள இது 25, 368 பேர் கொண்ட மக்கள் தொகையை கொண்டிருக்கிறது.
சிங்போ எனும் உள்ளூர் ஆதிகுடி மக்கள் இந்நகரத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். டாய்-கம்ப்டி, டாய்-கம்யாங் மற்றும் டாய்-பக்கே ஆகிய இனங்களை சேர்ந்த மக்களும் இங்கு வசிக்கின்றனர்.
போர்டும்சா எனும் பெயரில் இரண்டு சொற்கள் அடங்கியுள்ளன.’போர்’ என்பது ‘பெரிய’ எனும் பொருளையும், ‘டும்சா’ என்பது சிங்போ இனத்தாரின் அடையாளப்பெயரையும் குறிக்கிறது.
போர்டும்சா நகர வட்டத்திற்குள் டும்சா கிராமம், கோஜு, கெலஞ்சா, லாலுங், கிடிங், கெரேம் போன்ர கிராமப்பகுதிகளும் அடங்கியுள்ளன. தீவிர மத நம்பிக்கைகள் கொண்டவர்களாக காணப்படும் இந்த மக்கள் பல்வேறு ஹிந்து மற்றும் நாட்டுப்புற திருவிழாச்சடங்குகளை பின்பற்றுகின்றனர்.
பரந்து காட்சியளிக்கும் தேயிலைத்தோட்டங்கள் மற்றும் அழகான புத்த கோயில்கள் போன்றவை இந்த போர்டும்சா நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக புகழ் பெற்றுள்ளன.
கோஜு எனும் இடத்திலுள்ள புத்தர் கோயில், நகர மையத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட புத்தர் சிலை, மற்றும் ஒரு சிவன் கோயில் போன்றவை இந்நகரத்தில் தவறவிடக்கூடாத அம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications