Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» மீராமர் பீச்

மீராமர் பீச் - கடலின் அழகிய தோற்றம்

11

மீராமரில் இருந்து தெரியும் அரபிக் கடலின் அற்புதமான தோற்றம் எவரையும் எளிதில் சொக்க வைத்து விடும். அதன் காரணமாகவே இந்தக் கடற்கரைக்கு 'கடலின் அழகிய தோற்றம்' எனும் பொருள் படும்படி மீராமர் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்தக் கடற்கரை மாண்டோவி நதி கடலில் கலக்கும் இடத்தில், பனாஜியிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.

மீராமர் பீச் 2 கிலோமீட்டர் பரப்பில் பரந்து விரிந்து கிடப்பதால் மாலையில் அப்படியே கடற்கரையில் ஒரு சிறு உலா செல்வது மனதிற்கு இதமாக இருக்கும். மேலும் நிலவொளியில் தகதகக்கும் மணற்பரப்பும், வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களிலிருந்து புறப்பட்டு வரும் இளந்தென்றலும் சேர்ந்து இந்திர லோகத்தில் இருப்பது போன்ற ஒரு பிரம்மையை உங்களுக்குள் ஏற்படுத்தி விடும்.  

மீராமர் பீச்சுக்கு நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் வரும் புலம்பெயர் பறவையினங்களை போலவே உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பயணிகளின் கூட்டமும் அதிகம். மேலும், இந்தக் கடற்கரையிலிருந்து வெகு அருகிலேயே டோனா பௌலா, அகுவாடா கோட்டை போன்ற புகழ்பெற்ற சுற்றுத் தலங்கள் அமைந்திருக்கின்றன.

மீராமர் பீச்சுக்கு விமான நிலையத்திலிருந்தோ, பனாஜி போன்ற கோவாவின் மற்ற பகுகளிளிருந்தோ, பேருந்து மற்றும் கார்களின் மூலம் சுலபமாக வந்து விடலாம். அதோடு வரும் வழியில் எண்ணற்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதால் புதிதாக இந்த இடத்திற்கு வருபவர் கூட சிக்கல், சிரமம் ஏதுமில்லாமல் விரைவாக மீராமர் பீச்சுக்கு வந்து சேரலாம்.

மீராமர் பீச் சிறப்பு

மீராமர் பீச் வானிலை

சிறந்த காலநிலை மீராமர் பீச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மீராமர் பீச்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed