பாக் கொய் என்று அழைக்கப்படும் வேத சிகரம் மான் மாவட்டத்தில் மிக உயர்ந்த மலைச் சிகரமாக அமைந்திருக்கிறது. மானின் மத்திய பகுதியிலிருந்து ஏறக்குறைய 70 கிமீ தொலைவில் இந்த சிகரம் அமைந்திருக்கிறது.
இந்த மலைச் சிகரத்தில் இருந்து பார்த்தால் மான் பகுதியைச் சுற்றியிருக்கும் மலைகளைக் கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த சிகரத்தில் இருந்து பாய்ந்து வரும் ஆறுகள் மனங்களை மயக்குபவையாக உள்ளன. அதிலும் குறிப்பாக பிரம்மபுத்திரா மற்றும் சின்ட்வின் ஆகிய ஆறுகளை இந்த பகுதியிலிருந்து மிகத் தெளிவாகப் பார்க்கலாம்.
இந்த சிகரத்திற்கு வெகு அருகில் ஒரு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கன்யாக் பகுதியில் அமைந்திருக்கும் பகுதிகளில் மிகவும் அழகான பகுதியாக இந்த நீர்வீழ்ச்சி கருதப்படுகிறது. வரலாற்றுப் பூர்வமாக பார்த்தால் ஆங்கிலேய படை வீரர்கள் முதன் முதலாக இந்த வேத சிகரத்தில்தான் தங்கள் முகாம்களை அமைத்திருக்கின்றனர்.
நாகா மலையில் அமைந்துள்ள இந்த வேத சிகரத்தில்தான் ஆங்கிலேயலர்கள் ஓப்பியம் தாவரங்களை வளர்த்து வந்துள்ளனர். இந்த பகுதியில் இருந்து பார்த்தால் வற்றாத ஜீவ நதிகளுள் ஒன்றான பிரம்மபுத்திர நதியின் ஆர்ப்பரித்து வரும் அழகை ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications