மொராதாபாத் மாவட்டத்தில் பகுய்பூர் எனும் கிராமத்தில் ஹம்சஃபர் ஹால் எனும் திருமண மண்டபத்திற்கு எதிரே இந்த ஜமா மசூதி அமைந்துள்ளது. கங்கை நதியை நோக்கியவாறு வீற்றுள்ள இந்த மசூதி1631ம் ஆண்டில் ருஸ்தம் கான் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை மற்றும் தாஜ்மஹால் போன்ற அற்புத அமைப்புகளை எழுப்பிய முகலாயர்கால கட்டிடக்கலையின் மற்றொரு சான்றாக இந்த ஜமா மசூதி அமைந்திருக்கிறது.
இந்த பிரம்மாண்ட மசூதியானது இப்பகுதி வாழ் மக்களின் ஐந்து வேளை தொழுகைக்கு பயன்படும் வகையில் பெரிய தொழுகைக்கூடத்தை கொண்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications