மொராதாபாத் - ஆக்ரா சாலையில் பஹ்ஜோய் எனும் இடத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள சதத்படி எனும் கிராமத்தில் இந்த பாடலேஷ்வர் கோயில் அமைந்திருக்கிறது. இது ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலில் பால் மற்றும் பங் தட்டூரா போன்ற பண்டங்கள் பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்படுகிறது.
இங்குள்ள உள்ளூர் மக்கள் இன்னும் ஒரு வித்தியாசமான இந்த கோயிலில் உள்ள தெய்வத்திற்கு காணிக்கையாக அளிக்கின்றனர். அந்த பொருள் – துடைப்பம் – என்பது ஒரு வியப்பூட்டும் தகவலாகும்.
நூற்றாண்டு கால பழமையை உடைய இக்கோயிலில் வேண்டிக்கொண்டதெல்லாம் நிறைவேறும் என்பதால் தீராத தோல் வியாதியால் அவதிப்படுபவர்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்து வேண்டிக்கொள்கின்றனர்.
திங்கள் கிழமை இங்குள்ள சிவனுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் இங்கு பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகமாக காணப்படும்.



Click it and Unblock the Notifications