ராமரின் மனைவியான சீதையின் பெயரால் அழைக்கப்படும் இந்த சீதா கோயிலில் அவரது சிலை இல்லை. இது ஜலிபூர் – சந்திரபூர் சாலையில் நானோர் எனும் கிராமத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. உள்ளூர் மக்கள் இதை சீதா மந்திர் மட் என்று அழைக்கின்றனர்.
புராணக்கதைகளின்படி, தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள சீதா விரும்பியபோது பூமி இரண்டாக பிளந்து இந்த இடத்தில் அவரை விழுங்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தின் ஞாபகார்த்தமாக இந்த சீதா கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications