முக்தேஸ்வர் ஆலயத்திற்கு வெகு அருகில் முக்தேஸ்வர் கண்காணிப்பு பங்களா அமைந்திருக்கிறது. இந்த பங்களா சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் என்பதில் ஐயமில்லை.
தற்போது பொதுப்பணித் துறையைச் சேர்ந்த கண்காணிப்புப் பங்களாவாக இது இருந்து வருகிறது. முன்பு இந்த பங்களா கேஎம்விஎன் ஓய்வு இல்லம் என்று அழைக்கப்படும் குமயோன் மந்தல் விகாஸ் நிகாமால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த பங்களாவில் ஆங்கிலேய இயற்கை உணர்வாளர் ஜிம் கோர்பெட் அதிக நாள்களை செலவிட்டு இங்கு தங்கி மக்களை அச்சுறுத்தும் புலிகளைக் கொல்லத் திட்டம் தீட்டியதாக, இங்கிருக்கும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சுற்றுலா பயணிகள் இந்த பங்களாவில் ஒரு நாள் அல்லது 2 நாள்கள் தங்கலாம்.



Click it and Unblock the Notifications