இந்த கரம்பி அணை நவாப் சர் சித்தி அஹ்மத் கானால் கட்டப்பட்டுள்ளது. சித்தி வம்சத்தினரின் ஆளுகையின் போது விக்டோரியா ராணியின் நினைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
முருட் ஜஞ்சிரா இரட்டைத்தீவில் அமைந்துள்ள இந்த அணை ‘விக்டோரியா ஜுபிளீ வாட்டர் ஒர்க்ஸ்’ எனும் அமைப்பின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.முருட் ஜஞ்சிரா மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நீராதாரமாக இந்த கரம்பி அணை அமைந்துள்ளது. பின்னணியில் பசுமையான இயற்கைக் காட்சிகளுடனும் பறவைகளின் இசையொலிகளின் மத்தியிலும் இந்த அணை அமைந்துள்ளது.குடும்பத்துடன் சிற்றுலா சென்று இயற்கை அழகை ரசித்து மகிழ இந்த அணைப்பகுதி மிகவும் உகந்த இடமாகும்.



Click it and Unblock the Notifications