ராஜஸ்தான் மாநிலத்தின் நாகௌர் நகரத்திலுள்ள இந்த சாய்ஜி கா டங்கா ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இங்கு ஸ்ரீ சாய்ஜி மஹராஜ் எனும் யோகியின் சமாதி இடம்பெற்றுள்ளது. உள்ளூர் மக்களின் கதைப்படி, இவர் வாழ்நாள் முழுதுமே மௌனமாக கடவுளைத் தியானித்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
எனவே இந்த மண்ணை புனிதப்படுத்துவதற்காக ராஜபுத்திர தாகுர் வம்சத்தார் அவரை இங்கு கூட்டி வந்து இப்பகுதியில் வசிக்கச்செய்துள்ளனர். இந்த புனித ஸ்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் யோகியின் சமாதியை வழிபடுவதற்காக வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications