Search
  • Follow NativePlanet
Share

நாகூர் – தமிழ்நாட்டில் ஒரு முக்கிய யாத்ரீக நகரம்!

11

தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகூர் அமைந்திருக்கிறது. வங்காள விரிகுடாவை ஒட்டிய கடற்கரை நகரமான இது நாகப்பட்டிணத்திற்கு வடக்கே 4 கி.மீ தூரத்திலும் காரைக்காலுக்கு தெற்கே 16 கி.மீ தூரத்திலும் உள்ளது. வரலாற்றுக்காலத்தில் இந்த ஊரில் ஒரு புத்த விஹாரம் இருந்ததாக சீனப்பயணி யுவான் சுவாங் தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார். 690 முதல் 728ம் ஆண்டு வரை இந்த ஊர் ராஜசிம்மர் எனும் பல்லவ மன்னரால் ஆளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

நாகூருக்கு அருகில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள்

நாகூரில் உள்ள ஒரு தர்க்கா இந்த ஊரின் முக்கிய அடையாளமாகவும் பிரசித்தமான ஆன்மீக யாத்ரீக மையமாகவும் திகழ்கிறது. இந்த இஸ்லாமிய தர்க்காவானது மீரான் சாஹிப் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீத் பாத்ஷா எனும் யோகிக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித், ஃபாத்திமா ஜாமியா மஸ்ஜித் மற்றும் தீருபள்ளி மஸ்ஜித் ஆகியன நாகூரில் உள்ள இதர முக்கியமான மசூதி பள்ளிவாசல்களாகும். தவிர, நாகூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நாகூர் பட்டிணஞ்சேரி எனும் மீனவ கிராமத்தில் சீராளம்மன் கோயில் எனும் முக்கியமான கோயிலும் உள்ளது.

சீராளம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் விமரிசையான உற்சவம் 10 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில்  நாகூரில் கந்தூரி திருவிழாவும் விசேஷமாக நடத்தப்பட்டு வருகிறது. 

மாரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில், சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் ஆகியனவும் நாகூரில் அமைந்திருக்கின்றன. இப்படி பல கோயில்கள் மற்றும் மசூதிகள் மட்டுமல்லாமல் இங்குள்ள கடற்கரைப்பகுதியும் ஒரு முக்கியமான சுற்றுலாப்பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகிறது.

வருடமுழுதும் நாடெங்கிலுமிருந்து ஏராளமான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாகூருக்கு வருகை தருகின்றனர்.

பயண வசதிகள்

தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலிருந்து மிகச்சுலபமாக நாகூர் நகரத்துக்கு வரலாம். நாகூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு ரயில் சேவைகள் உள்ளன. சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்கள் நாகூருக்கு அருகிலுள்ள முக்கிய விமான நிலையங்களாகும்.

பருவநிலை

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் நாகூர் கடற்கரைப்பிரதேச பருவநிலையை கொண்டுள்ளது.

நாகூர் சிறப்பு

நாகூர் வானிலை

சிறந்த காலநிலை நாகூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நாகூர்

  • சாலை வழியாக
    தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களோடு மட்டுமல்லாமல் அண்டை மாநில நகரங்களோடும் நல்ல சாலை இணைப்புகளை நாகூர் நகரம் பெற்றிருக்கிறது. கன்னியாகுமரி, திருச்சி, சென்னை, தஞ்சாவூர், திருவனந்தபுரம், மதுரை மற்றும் பாண்டிச்சேரி போன்ற நகரங்களுக்கு நாகூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சொகுசுப்பேருந்து வசதிகள் இங்கிருந்து சில முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நாகூர் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் நாகப்பட்டிணம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு ரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நாகூரிலிருந்து திருச்சி விமானநிலையம் 140 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன. நாகூரிலிருந்து 300 கி.மீ தூரத்திலுள்ள சென்னை விமானநிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகவும் நாகூருக்கு வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue