நாக்பூரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த அம்பாஜாரி ஏரி. ஏறக்குறைய 15 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி ஒரு சிறந்த அழகான பொழுதுபோக்கு ஸ்தலமாகும்.
இந்த ஏரியைச் சுற்றிலும் அழகான பூங்கா ஒன்று உள்ளது. பூங்காவின் நடுவின் இசை நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கு பிரத்யேகமான கருவிகள் மற்றும் அமைப்புகள் உள்ளதால் சிறு குழந்தைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் பூங்காவாக காணப்படுகிறது.
குட்டி ரயில், படகு போக்குவரத்து மற்றும் பலவித ஊஞ்சல்கள், சவாரிகள் இங்கு குழந்தைகளுக்கு கிடைக்கும் பொழுதுபோக்கு அம்சகளில் குறிப்பிடத் தக்கவை ஆகும். காலை நேர நடைப்பயணம் மேற்கொள்பவர்களுக்கென பிரத்யேக நடைப்பாதைகளும் இந்த பூங்காவில் உள்ளன.



Click it and Unblock the Notifications