ராம்தேக் கோட்டையின் பின்னணியில் ஒரு புராணிகக் கதை கூறப்படுவதாக இந்த கோட்டை யாத்ரிகர்கள் மத்தியில் பிரசித்தமாக விளங்குகிறது. அதாவது ராம பஹவான் இந்த இட்த்தில் வனவாசத்தின்போது சீதா தேவி மற்றும் லட்சுமணனுடன் வசித்ததாக நம்ப்ப்படுகிறது.
இங்குள்ள கோயில் ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகள் பழமையை உடையது என்பதுடன், மஹாகவி காளிதாஸ் தன்னுடைய புகழ் பெற்ற காவியமான மேகதூதத்தை இங்கு தான் எழுதினார் என்றும் வரலாறு கூறுகிறது.
ராம்தேக் நாக்பூர் நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. சொர்க்கபுரி போல் காட்சியளிக்கும் இவ்விடத்தின் எழில் நகரத்தின் சந்தடி நிறைந்த வாழ்க்கைக்கு ஒரு சிறந்த மாற்று மருந்தாகும்.



Click it and Unblock the Notifications