நாக்பூருக்கு வெகு அருகிலேயே இந்த தெலங்காடி ஏரி அமைந்துள்ளது. அமைதியாக மாலை நேரத்தினை கழிப்பதற்கு பொருத்தமானது இந்த இடம். மென் மணற்பரப்போடு காணப்படும் ஆற்றின் கரை சுற்றுலாப்பயணிகளுக்கு கண்ணுக்கு விருந்தாக திகழ்கிறது. குழந்தைகள் பொழுது போக்குவதற்கு வசதியாக பசுமையான பூங்காவும், மீன் காட்சியகமும் இங்கு உள்ளன.
அருகிலேயே பிரசித்தி பெற்ற ஹனுமான் கோயில் ஒன்றும் உள்ளது. இங்கு தரிசனம் செய்பவர்கள் என்ன வேண்டினாலும் அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications