டிராகன் பேலஸ் கோயில் நாக்பூரில் உள்ள மற்றொரு பிரம்மாண்டமான கீர்த்தி பெற்ற கோயிலாகும். 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த கோயில் நாக்பூருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள காம்ப்டீ புறநகர் பகுதியில் உள்ளது.
இந்த கோயில் அங்குள்ள அமைதியான புத்த தியான மண்டபத்திற்கு மிகவும் பெயர் பெற்றது. தியான மண்டபத்தின் முதல் தளத்தில் புத்த பஹவானின் ஒரு பெரிய உருவச்சிலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பசுமையான புல்தரையின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோயில் தாமரைக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அற்புதமான கட்டிடக்கலை வடிவமைப்புக்காக இது சிறந்த கான்கிரீட் கட்டிட கட்டமைப்புக்கான சர்வதேச விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications