கர்ணி ஹவுஸ் எனும் இந்த பழமையான கட்டிடம் புகழ் பெற்ற பிரிட்டிஷ் வேட்டைக்காரரும் இயற்கை ஆராய்ச்சியாளருமான ஜிம் கார்பெட் வாழ்ந்த மாளிகையாகும். அவரது மரணத்திற்கு பின் இம்மாளிகை சாரதா பிரசாத் வர்மா என்பவருக்கு விற்கப்பட்டிருக்கிறது.
அவரது பேத்தியான நிலஞ்சனா டால்மியா என்பவருக்கு தற்போது இந்த மாளிகை சொந்தமாக உள்ளது. முன் அனுமதியின் பேரின் ஜிம் கார்பெட்டின் ரசிகர்கள் இம்மாளிகையை சுற்றிப்பார்க்க இதன் உரிமையாளர்கள் வசதி செய்துள்ளனர்.
1881ம் ஆண்டு கட்டப்பட்ட இம்மாளிகையில் ஜிம் கார்பெட் பயன்படுத்திய சில பொருட்களை இன்றும் பார்க்கலாம். வெற்றிக்கேடயங்கள், ஆப்பிரிக்க முரசு, படகு, தூண்டில், நூல்கள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.



Click it and Unblock the Notifications