ஹஜூர் சாஹிப் குருத்வாரா, நாந்தேட்

சீக்கியர்களின் ஐந்து சிங்காதனத்தில் ஒன்றினை தன்வசம் கொண்ட பெருமை வாய்ந்த ஹஜூர் சாஹிப் குருத்வாரா கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் சீக்கிய கட்டிடக் கலையினை உலகுக்கு எடுத்துச் சொல்லும் உன்னத சாட்சியாக இன்று நம்மிடையே உள்ளது.

இங்கு அதிகாலை வேளையில் போராயுதங்களை எல்லாம்  புனித நீரால் சுத்தபடுத்தி செய்யப்படும் பூஜை மிகவும் சிறப்பானது. அந்த சமயங்களில் உணர்சிகள் உச்சமடைந்து பக்தர்கள் பரவச நிலையில் காணப்படுவது இங்கு தினந்தோறும் காணக்கூடிய காட்சி.

Please Wait while comments are loading...