கடல் மட்டத்திலிருந்து 1830 மீ உயரத்திலும், நர்கண்டா நகரத்தில் இருந்து 17 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கும் கோட்கார் மற்றும் தானேடார் ஆகிய இரு இடங்கள் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகும்.
சட்லெஜ் நதியின் இடப்பக்க கரையில் 'U' வடிவமுயை பழங்கால பள்ளத்தாக்குகளுக்காக புகழ் பெற்ற இடமாக கோட்கார் விளங்கும் நேரத்தில், தானேடார் அதன் ஆப்பிள் தோட்டங்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது.
கோட்கார் பள்ளத்தாக்கில் இருந்தபடியே குலு பள்ளத்தாக்கின் கண்கவர் காட்சிகளையும், பனி படர்ந்த இமயமலை தொடர்களையும் சுற்றுலாப் பயணிகளால் அனுபவித்திட முடியும்.
புகழ் பெற்ற எழுத்தாளரான ரூட்யார்டு கிப்ளிங் என்பவர், தன்னுடைய 'லிஸ்பெத்' என்ற சிறுகதையில் கோட்கார் பகுதியை 'வடக்கத்திய மலைகளின் தலைவி' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு இடங்களும் நர்கண்டாவின் மிகப்பசுமையான பள்ளத்தாக்குகளாக கருதப்படுவதற்கு அவற்றின் ஆப்பிள் பண்ணைகளும், தோட்டங்களும் காரணமாக இருக்கின்றன.
புகழ் பெற்ற இடமான ஸ்டோக்ஸ் பண்ணை, இந்திய தத்துவங்களால் கவரப்பட்டு 1904-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த சாமுவேல் ஸ்டோக்ஸ் என்பவரால் தானேடாரில் தொடங்கப்பட்டது.
சர்வதேச சந்தைகளில் புத்துணர்ச்சி மற்றும் சுவைக்காக அறியப்படுகிற ரெட் டெலிசியஸ், கோல்டன் டெலிசியஸ் மற்றும் ராயல் டெலிசியஸ் ஆகிய வகையிலான ஆப்பிள்கள் ஸ்டோக்ஸ் பண்ணையில் விளைகின்றன.



Click it and Unblock the Notifications