ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நர்கண்டா நகரத்திலுள்ள தானேடார் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்டோக்ஸ் பண்ணை ஒரு முதன்மையான சுற்றுலா தலமாகும். உலகளவில் புகழும், பல்வேறு நாடுகளில் விற்பனையும் ஆகிக் கொண்டிருக்கும் சுவைமிக்க ஆப்பிள்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இடம் ஸ்டோக்ஸ் பண்ணையாகும்.
பரந்து விரிந்த பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பண்ணையின் ஆப்பிள் தோட்டங்கள் பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சியையும் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலையும் அளிப்பதில் வியப்பில்லை.
இந்திய தத்துவங்களால் கவரப்பட்டு 1904-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த சாமுவேல் ஸ்டோக்ஸ் என்பவர் தான் இந்த ஆப்பிள்களை வணிக நோக்கில் வளர்ப்பதற்கு காரணமானவராவார்.
பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஆப்பிள் மரங்களால் இந்த இடம் முழுமையாகவும் வெண்மை நிற பள்ளத்தாக்கைப் போல காட்சியளிக்கும் ஏப்ரல் மாதத்தில் இந்த பண்ணைக்கு வருகை தருவது பார்வையாளருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜுலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரை நடக்கும் அறுவடைக் காலமும் இந்த பண்ணைக்கு வருகை தர ஏற்ற நாட்களாகும்.



Click it and Unblock the Notifications