குருத்வாரா பாய் சீக் ஹியாலா என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா பாபா பாய் சீக் அவர்களின் இருப்பிட மாளிகை அமைந்திருந்த இடத்திலேயே கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் பாபா அவர்கள் மக்களுக்கு ஆன்மீக உபதேசம் அளிக்கும் வழக்கத்தை கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
மனித சேவையில் உண்மையாக ஈடுபடுபவர்களே உண்மையான கடவுள் பக்தர்கள் எனும் கருத்தை அவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குருத்வாரா ஸ்தலத்தில் வருடாவருடம் ஒரு திருவிழாவும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் வெகு தூரத்திலிருந்தும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த குருத்வாராவுக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications