கோஸ்பால் எனும் முஸ்லிம் ஞானியின் எட்டு மகன்களில் ஒருவரான பாபா அப்துல்லா ஷா காத்ரி என்பவரின் நினைவாக மண்டலி எனும் இடத்தில் இந்த ரோஸா ஷரீஃப் மண்டலி கட்டப்பட்டிருக்கிறது.
இங்குள்ள ரயில் நிலையமும் அவரது பெயரில் ‘பாபா அப்துல்லா ஷா காத்ரி ரயில்வே ஸ்டேஷன் குல்தம்’ என்று அழைக்கப்படுகிறது. ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் வருடாந்திரமாக இங்கு நடத்தப்படும் திருவிழாவில் ஏராளமான யாத்ரீகர்கள் கலந்துகொள்கின்றனர்.
இசைப்பிரியர்கள் மற்றும் கவால், கஜல் இசைக்கலைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இங்கு விஜயம் செய்கின்றனர். பல்வேறு இனத்தாரும் ஒன்று கூடி இந்த உள்ளூர் திருவிழாக்கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அற்புதக்காட்சியை பயணிகள் அச்சமயம் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications