நெல்லூர் நகர மையத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் இந்த நரசிம்மஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மஹாவிஷ்ணு அவரது நான்காவது அவதாரமான நரசிம்ம அவதார ரூபத்தில் வீற்றுள்ளார். இந்த கோயில் வேதகிரி லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
வைணவ பக்தர்கள் மத்தியில் இது ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாக புகழ் பெற்று விளங்குகிறது. பலவித புராண ஐதீகக்கதைகளும் இந்த கோயிலைப்பற்றி சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயிலின் உள்ளே குழந்தை பாக்கியத்தை அருளும் ‘சந்தான விருக்ஷம்’ காணப்படுகிறது. எனவே ஏராளமான தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.
இங்குள்ள ‘கொண்டி கசுலி ஹுண்டி’ எனும் சன்னதி பாம்பு, தேள் போன்ற ஜந்துக்களின் விஷக்கடியை குணப்படுத்துவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. பிரதான கோயிலுக்கு மேற்பகுதியில் ஆதிலட்சுமி தேவிக்காக தனியான ஒரு சிறு கோயிலும் காணப்படுகிறது. நெல்லூருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த கோயிலை தரிசிப்பது மிக மிக அவசியம்.



Click it and Unblock the Notifications