நெல்லூர் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் இந்த ராமலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது ராமதீர்த்தம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. சிவபெருமான் மற்றும் காமாட்சியம்மனுக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
மூலவர்களாக சிவன் மற்றும் அவரது துணைவியார் காமாட்சியம்மன் பூஜிக்கப்படுகின்ற போதிலும், விக்னேஷ்வரர் மற்றும் சுப்ரமண்யரும் கூட இந்த கோயிலில் தரிசனமளிக்கின்றனர்.
காலனிய ஆட்சிக்கு முன்பே கட்டப்பட்டிருக்கும் இந்த புராதனக்கோயிலின் கட்டுமான கலையம்சங்கள் பிரமிப்பூட்டுவதாக உள்ளன. நெல்லூரில் அவசியம் தரிசிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்றான இந்த ராமதீர்த்தத்தை மாநில நெடுஞ்சாலை மூலமாக சுலபமாக சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications