Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை-நாகர்கோயில் மற்றும் மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் சேவை இன்று தொடக்கம்!

சென்னை-நாகர்கோயில் மற்றும் மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் சேவை இன்று தொடக்கம்!

இந்திய ரயில்வே ஒவ்வொரு நாளும் பயணிகளுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குவதில் திறம்பட இயங்கி வருகிறது. வந்தே பாரத் எனும் அரை அதிவேக ரயில் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டதில் இருந்து பெரிதும் வரவேற்கப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மைசூரு வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயங்குகின்றன. இப்போது புதிதாக சென்னை-நாகர்கோயில் மற்றும் மதுரை-பெங்களூரு வழித்தடங்களில் 2 புதிய வந்தே பாரத் சேவைகள் இன்று துவங்கப்படவிருக்கின்றன!

வந்தே பாரத் வலையமைப்பில் இன்று சேரும் புதிய சேவைகள்

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 31 ஆம் தேதி சனிக்கிழமையன்று மூன்று புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று ரயில்களும் 100க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நெட்வொர்க்கில் சேர்க்கப்படும், அவை 280 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை இணைக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொத்தமாக 3 வந்தே பாரத் சேவைகள்

சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயில் ஒன்று, மதுரையில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் வரை இரண்டாவது வந்தே பாரத் மற்றும் மீரட் சிட்டி-லக்னோவில் இருந்து மூன்றாவதாக என மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து இன்று தொடங்கி வைக்கிறார்.

chennai-nagercoil

சென்னை எழும்பூர் to நாகர்கோயிலுக்கு வந்தே பாரத் சேவை

· சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் புதன் கிழமை தவிர வாரத்தின் எல்லா நாட்களிலும் இயங்கும்.

· ரயில் எண் 20627 சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

· இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

· மறு மார்க்கமாக ரயில் எண் 20628 நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2:20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை வந்தடையும்.

மதுரையிலிருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில்

· மதுரை மற்றும் பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் ரயில் செவ்வாய் கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும்.

· இந்த வந்தே பாரத் சேவையானது தமிழ்நாட்டின் பரபரப்பான கோவில் நகரமான மதுரையை கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவின் காஸ்மோபாலிட்டன் நகரத்துடன் இணைக்கும்.

· ரயில் எண். 20671 மதுரையில் இருந்து அதிகாலை 5:15 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடைந்து, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். மாலை 30 மணிக்கு, இரவு 9:45 மணிக்கு மதுரை வந்தடையும்.

chennai-Madurai

மீரட் சிட்டி-லக்னோ வந்தே பாரத் ரயில்

· மீரட் சிட்டி-லக்னோ வந்தே பாரத் ரயில் தனது வழக்கமான சேவையை லக்னோவில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும் மீரட்டில் இருந்து திங்கள்கிழமையும் தொடங்கும். செவ்வாய் கிழமைகள் தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்களும் செயல்படும்.

· ரயில் 22490 மீரட் நகரில் இருந்து காலை 6:35 மணிக்குப் புறப்பட்டு லக்னோவின் சார்பாக் இரயில்வே நிலையத்தை மதியம் 1:45 மணிக்கு வந்து சேரும், மொராதாபாத் மற்றும் பரேலியில் நிறுத்தப்படும்.

· மறு மார்க்கமாக ரயில் எண். 22489, இந்த ரயில் சார்பாக் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:45 மணிக்குப் புறப்பட்டு இரவு 10:00 மணிக்கு மீரட் நகரை வந்தடையும்.

More News

    Read more about: chennai news tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+