Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இந்த 5 வருடத்தில் மட்டும் 555 சிங்கங்கள் இறந்துவிட்டன – என்ன நடக்கிறது?

இந்தியாவில் இந்த 5 வருடத்தில் மட்டும் 555 சிங்கங்கள் இறந்துவிட்டன – என்ன நடக்கிறது?

காடுகளின் ராஜாவாக கம்பீரமாக வலம் வரும் சிங்கங்களை நம்மில் யாருக்கு தான் பிடிக்காது. அந்த முடியும், கர்ஜனையும், நடையும், மிரட்டலும் பார்ப்போரை வியக்க வைக்கிறது. ஒரு நாட்டின் அரசன் மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருக்க வேண்டும். ஒரு ராஜாவுக்கு உண்டான அனைத்து தகுதிகளும் சிங்கத்திற்கே இருப்பதனால் தான் இது காட்டுக்கே ராஜா என்றழைக்கப்படுகிறது.

காட்டில் ஒரு விலங்கு இனம் அழிந்தாலும் கூட அது காட்டின் சுற்றுச்சூழல் அமைப்பை மிகவும் பாதிப்படைய வைக்கிறது. ஆனால் அந்த ராஜாவே அழியும் போது காட்டின் நிலை என்ன ஆகும்? இந்நிலையில் இந்தியாவில் கடந்த 5 வருடத்தில் மட்டும் 555 சிங்கங்கள் இறந்துவிட்டன என்கிற தகவல் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது!

சிங்கம் இறந்தால் காட்டில் என்ன நடக்கிறது

காட்டில் சிங்கம் இறந்தால், அதன் குடும்பம் அதனை பிரிந்து வாட ஆரம்பிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைத்தும் தனியாக உணர்கின்றன. ஒரு ஆண் சிங்கம் இறக்கும் போது இத்தகைய சூழல் எப்போதும் நடக்கிறது. கூட்டத்தின் பெரிய சிங்கம் இறந்த பிறகு பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இளைய ஆண் சிங்கம் (சிங்கத்தின் மகன்) ராஜாவாகி, கூட்டத்தை வழிநடத்தத் தொடங்கும். இருப்பினும், மற்ற சந்தர்ப்பங்களில் பெண் சிங்கம் முழு மந்தையையும் மிகுந்த பெருமையுடன் வழிநடத்துகிறது. ஆனால் ஒரு சிங்கம் இறக்கும் போது, முழு காடுமே கூட சில இடங்களில் வருத்தப்படுகிறது.

555asiaticlionsdeadinindia

ஏன் சிங்கம் மட்டும் தான் காட்டுக்கு ராஜாவா?

சிங்கங்களும் ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் ஓய்வெடுக்கின்றன. ஒரு வகையில், அவர்களுக்கு அரசர்களின் வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள், தூங்குகிறார்கள் மற்றும் பூச்சிகளை அழிக்கிறார்கள். அதனால்தான் சிங்கங்கள் காட்டின் ராஜாக்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், உடலளவில் சிங்கங்களை விட யானைகள் பெரிது, அவை ஏன் ராஜாவாக மாறவில்லை. காரணம் யானை பெரிதாக இருந்தாலும் அது ஒரு சாதுவான விலங்கு, சிங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அது ஒரு ஆக்ரோஷமான விலங்கு.

இந்தியாவில் இறந்து வரும் சிங்கங்கள்

இந்தியாவின் பல்வேறு பகுதிகள் ஆசிய சிங்கங்களின் தாயகமாகும். அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருவதுடன், தற்போதைய சூழ்நிலையும் மிகப்பெரிய கவலையாக மாறிவருகிறது. ஆனால் அவைகள் ஏன் திடீரென உயிருக்கு ஆபத்தான சம்பவங்களை எதிர்கொள்கின்றன? என்ன காரணம்?

555asiaticlionsdeadinindia

கடந்த 5 ஆண்டுகளில் 555 சிங்கங்கள் இறப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 555 ஆசிய சிங்கங்கள் இறந்துவிட்டன, ஆனால் அவற்றின் இறப்பு விகிதத்தில் எந்த அதிகரிப்பும் இல்லை என்று அரசாங்கம் திங்களன்று மக்களவையில் தெரிவித்துள்ளது. குஜராத்தில் உள்ள கிர் காடுகள் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் ஆசிய சிங்கங்கள் வாழ்கின்றன. அரசாங்கத் தரவுகளின்படி, கிரில் இந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2015 இல் 523 இல் இருந்து 2020 இல் 674 ஆக உயர்ந்துள்ளது.

என்ன காரணங்களால் சிங்கங்கள் இறக்கின்றன

ரயில் தண்டவாளத்தில் உயிரிழக்கும் சிங்கங்களை கட்டுப்படுத்த வனத்துறையும், அதிகாரிகளும் முறையான கண்காணிப்பைத் தொடங்க வேண்டிய நேரம் இது. ஒரு குறிப்பிடத்தக்க படி என்னவென்றால், சுற்றுவட்டாரத்தில் உள்ள வனத்துறையினர் சிங்கங்களின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பல வனத்துறையினர் அடிக்கடி உயிருக்கு ஆபத்தான சம்பவங்களை எதிர்கொள்கின்றனர் மற்றும் இந்த விலங்குகளை காப்பாற்றும் முயற்சியில் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர். விபத்து தவிர, சுற்றுச்சூழல் அமைப்பு, இரை இல்லாமை போன்ற காரணங்களால் சிங்கங்கள் இறந்து வருகின்றன.

இந்தியாவில் சிங்கம் இறந்த பின்னர் என்ன செய்யப்படுகிறது?

இந்தியாவின் அனைத்து காடுகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் இருக்கும் சிங்கங்களின் முழுமையான பதிவுகள் வனத்துறையிடம் உள்ளது. அவ்வப்போது இந்தப் பதிவு அமைச்சகத்துக்கும் அனுப்பப்படுகிறது. முதலில் இறந்த சிங்கத்தின் உடல் கைப்பற்றப்பட்டு அருகிலுள்ள வனவிலங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பிறகு மருத்துவரின் மேற்பார்வையில் சிங்கத்தின் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. வனத்துறை தவிர, பிரேத பரிசோதனை அறிக்கை மாவட்ட அதிகாரிக்கும் அனுப்பப்படுகிறது. அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், சிங்கத்தின் உள்ளுறுப்பு தடயவியல் துறைக்கு ஆய்வு செய்ய அனுப்பப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இறந்த சிங்கங்களின் எண்ணிக்கை

2019 ஆம் ஆண்தில் 113 சிங்கங்கள் இறந்துள்ளன

2020 ஆம் ஆண்டில் 124 சிங்கங்கள் இறந்துள்ளன

2021 ஆம் ஆண்டில் 105 சிங்கங்கள் இறந்துள்ளன

2022 ஆம் ஆண்டில் 110 சிங்கங்கள் இறந்துள்ளன

2023 ஆம் ஆண்டில் 103 சிங்கங்கள் இறந்துள்ளன

2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை முற்றிலுமாக குறைய வேண்டும் என்று நம்புவோம்!

More News

Read more about: travel news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+