ஸ்ரீ ராமபிரான் பிறந்த இடத்தில் எழுப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழாவிற்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் ராமர் கோவிலைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்களும், லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 7,000 கிலோ அல்வா தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும்!
முழு வீச்சில் நடைபெறும் கும்பாபிஷேக பணிகள்
புனித கோவிலின் திறப்பு விழாவுக்கான முக்கிய ஏற்பாடுகள் சில நாட்களாக நடந்து வருகின்றன. கோவில் மற்றும் அதன் நுணுக்கமான வடிவமைப்புகள் மற்றும் அலங்காரங்களுடன், பக்தர்களைக் கவரும் வகையில், தற்போதைய ஏற்பாடுகளும், பெருநாளுக்காக அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது.

நாடு முழுவதும் உற்சாகத்துடன் இருக்கும் மக்கள்
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம் மந்திர் கும்பாபிஷேக விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வரலாற்று நிகழ்வுக்காக நாடு முழுவதும் பண்டிகை கால உற்சாகத்துடன் நிரம்பியுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும் கும்பாபிஷேகத்திற்கு ஆவலுடன் தயாராகி வருபவர்களில் சமையல் கலைஞர் விஷ்ணு மனோகரும் ஒருவர்.
உலக சாதனை படைக்கப் போகும் பிரசாதம்
ஏழாயிரம் கிலோகிராம் ராம் அல்வாவை பக்தர்களுக்காக தயார் செய்து புதிய சாதனை படைக்கத் தீர்மானித்துள்ளார். இதற்காக கின்னஸ் உலக சாதனை, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த பதிவை ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு சமர்பிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராமர் கோவில் பிரசாதமாக 'ராம் அல்வா'
சில ஆண்டுகளுக்கு முன்பு அயோத்திக்குச் சென்றதிலிருந்து, மனோகர் புனித நகரத்துடன் தொடர்பை வளர்த்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி மந்திர் திறப்பு விழாவை அறிவித்தபோது, சமையல் கலைஞர் விஷ்ணு அதற்கு அர்த்தமுள்ள ஏதாவது பங்களிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாக உணர்ந்தார். அதனால் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக 'ராம் அல்வா' தயாரித்து கொடுக்க விரும்பினார்.
பிரத்யேக முறையில் தயாரிப்பு
மகாராஷ்டிர ஸ்பெஷல் இனிப்பான ராம் அல்வா செய்ய மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். ரவை, நெய், சர்க்கரை, ஏலக்காய், பால் மற்றும் உலர் பழங்கள் ஆகியவை இதில் அடங்கும். துளசி இலைகள் மற்றும் வாழைப்பழங்களைச் சேர்ப்பது இந்த இனிப்பை வேறுபடுத்துகிறது. மேலும் அவர் செய்முறையில் பயன்படுத்தப்படும் நெய், பிரத்யேகமாக ஆந்திராவின் திருப்பதியில் இருந்து கொண்டு செல்லப்படுமாம்.
அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படும்
மனோகர், இது போன்ற சாதனைகளுக்கு புதியவர் அல்ல - இதற்கு முன்பு இதுபோன்ற 14 சாதனைகளைப் படைத்துள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்ச்சிக்காக 6,500 கிலோ எடையுள்ள ஸ்ரீ கஜானன் கிச்சடி தயாரித்தது உட்பட அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு இவர் செய்யும் அல்வா பிரசாதமாக வழங்கப்படும்.



Click it and Unblock the Notifications





