இங்கே வசிக்கும் பெரும்பாலான மக்கள் விமானப் பயணம் எடுக்காமல் சென்னையிலிருந்து பெங்களூர், ஹைதராபாத் கூட செல்வது இல்லை. ஆனால் தோர் பெடர்சன் எனும் சுற்றுலாப் பயணி ஒருவர், உலகிலுள்ள 203 சுற்றுலா சென்றுள்ளார், அதுவும் ஒரு முறை கூட விமானப் பயணத்தை உபயோகித்தது இல்லையாம்! இது எப்படி சாத்தியம்?
விமான பயணத்தை சார்ந்துள்ள இன்றைய வாழ்க்கை
நேரத்தை மிச்சப்படுதுவதற்காகவும், வசதியான பயணத்தை மேற்கொள்ளுவதற்காகவும் நம்மில் பலரும் எங்கு சென்றாலும் விமான பயணத்தையே மேற்கொள்ளுகிறோம். இன்றைய காலக்கட்டத்தில், நேரத்தைச் சேமிக்கப் பழகிவிட்ட நிலையில், நமது பயணங்களில் பெரும்பாலானவை விமானத்தையே சார்ந்திருக்கிறது. இந்த பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகில் டென்மார்க்கை சேர்ந்த தோர் பெடர்சன் என்ற சுற்றுலாப் பயணி ஒரு முறை கூட விமானத்தை பயன்படுத்தாமல் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொன்று சுற்றிப் பார்த்துள்ளார்.

விமானமின்றி உலகை சுற்றிப் பார்த்த தோர் பெடர்சன்
தோர் பெடர்சன் கால் நடை, கார், பேருந்து, ரயில், படகு மற்றும் கொள்கலன் கப்பல் மூலம் உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் பயணம் செய்துள்ளார். 44 வயதான இந்த நபர் தனது லட்சிய பணியை முடிக்க 10 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார். அவர் 2013 இல் தனது பயணத்தைத் தொடங்கினார், 2023 இல் தான் பயணம் முடிந்தது.
மொத்தமாக 203 நாடுகளை சுற்றிப் பார்த்த தோர்
இரண்டு உறுப்பினர் அல்லாத நாடுகள் உட்பட உலகில் மொத்தம் 195 நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தாலும், சர்ச்சைக்குரிய பிரதேசங்களுக்கும் தான் விஜயம் செய்ததாக பெடர்சன் கூறினார். வரலாற்றில் யாரும் பறக்காமல் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் முழுமையாகச் சென்றதில்லை என்று தனக்கு தோன்றியதாகவும், அதனாலையே இப்படியொரு பயணத்தை முடித்து காட்ட வேண்டும் என்று எண்ணி இதில் இறங்கியதாகவும் அவர் கூறினார்.
10 வருடங்கள் உலகச் சுற்றுலா
தன் குடும்பம், வேலை மற்றும் உறவினர்கள் விட்டுவிட்டு உலகம் முழுவதும் பயணம் செய்யப் புறப்பட்ட டொர்ப்ஜோர்ன் 'தோர்' பெடர்சன் இந்த கற்பனை செய்ய முடியாத சாதனையைச் செய்துள்ளார். அறிக்கைகளின்படி, அவர் அக்டோபர் 10, 2013 அன்று தொடங்கிய இந்த காவிய பயணம் ஜூலை 26, 2023 அன்று டென்மார்க் திரும்பிய பின்னர் முடிவடைந்தது.
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு நாள்
ஒவ்வொரு தேசத்திலும் குறைந்தது 24 மணிநேரம் செலவிட வேண்டும், ஒரு நாளைக்கு $20 செலவழிக்க வேண்டும், பயணம் முடியும் வரை வீடு திரும்பக்கூடாது என மூன்று விதிகளை அவர் தனக்கென வகுத்துக் கொண்டாராம். உலகெங்கிலும் உள்ள 203 நாடுகளில் பயணம் செய்ய பெடர்சன் 3,500 நாட்களுக்கு மேல் ஆனது.

ஜெர்மனி to மாலத்தீவு
ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸில் பணிபுரிந்த பெடர்சன், பாதையைத் திட்டமிடுவதற்கு "பல மணிநேரம்" செலவிட்டதாகக் கூறினார். அவரது வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பெடர்சன் முதலில் டென்மார்க்கிலிருந்து ஜெர்மனிக்குச் சென்று பின்னர் நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். மே 23, 2023 அன்று பெடர்சன் கடைசியாகச் சென்ற நாடு மாலத்தீவு, அத்துடன் அவர் டென்மார்க் திரும்பினார்.
பல சவால்களை கடந்து சாதனை
பெடர்சனின் பயணம் அவ்வளவு சீராக இல்லை. தொற்றுநோய் உலகைத் தாக்கியபோது, அவர் இரண்டு ஆண்டுகளாக ஹாங்காங்கில் சிக்கிக்கொண்டார். அதிகாரத்துவ மற்றும் தளவாட சிக்கல்கள், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் எபோலா வெடிப்பு போன்ற பிற தடைகளையும் பெடர்சன் எதிர்கொண்டார். ஐஸ்லாந்தில் இருந்து கனடாவிற்கு அட்லாண்டிக் கடக்கும் போது நான்கு நாள் கடுமையான புயலில் இருந்து தப்பியதாக கூறினார்.
இன்ஸ்டாகிராமில் வாழ்த்து மழை
பெடர்சன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும் கூறினார். "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் என்னை வீட்டிற்கு வரவேற்க வந்தனர். குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள், பின்தொடர்பவர்கள். என்ன வரவேற்பு!! ஒரு நேரடி இசைக்குழு இசைத்தது "துறவிகள் வீட்டிற்கு அணிவகுத்து வரும் போது. பரிசுகள், அணைப்புகள், கைதட்டல்கள் மற்றும் அன்பால் நான் மூழ்கிவிட்டேன். நன்றி." என அவர் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பயணம் செய்வதற்கும், எல்லைகளைக் கடப்பதற்கும், கலாச்சாரங்களைக் கண்டறிவதற்கும், புதிய நண்பர்களை உருவாக்குவதற்கும் ஒருவர் கோடீஸ்வரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை இவரின் செயல் உணர்த்துகிறது.



Click it and Unblock the Notifications



