Search
  • Follow NativePlanet
Share
» »அருணாச்சலப் பிரதேசத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு டூரிஸ்ட் சர்க்யூட்டுகள் – விவரங்கள் இங்கே!

அருணாச்சலப் பிரதேசத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு டூரிஸ்ட் சர்க்யூட்டுகள் – விவரங்கள் இங்கே!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்திற்கு ஒருமுறையாவது சுற்றி பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை நம் எல்லோர் மனதிலும் உண்டு.அருணாச்சலப் பிரதேசத்தின்

பல்வேறு சலுகைகளை மக்கள் ஆராய உதவுவதற்காகவும், சிறந்த சுற்றுலா அனுபவம் மற்றும் மாநிலத்தின் உள்ளூர் மேம்பாட்டுக்காகவும் இரண்டு புதிய டூரிஸ்ட் சர்க்யூட்டுகளை
தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

arunachalpradeshnewtouristcircuit1

"புதிய சுற்றுலா வழித்தடங்களை திறப்பது தொடர்பான அருணாச்சல பிரதேச அரசின் முன்மொழிவு மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுலா நோக்கத்திற்காக இரண்டு புதிய சுற்றுலா வழித்தடங்களை திறக்க உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிதாக அறிவிக்கப்பட்ட டூரிஸ்ட் சர்க்யூட்டுகளில் ஒன்று திராப் மாவட்டத்தில்

திப்ருகர் - தியோமாலி - ஹுகன்ஜூரி - கோன்சா
எனவும் மற்றும் லாங்டிங் மாவட்டத்தில் திப்ருகர் - கனுபாரி - லாங்டிங்
எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த அழகான இடங்களில் என்ன தான் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பது பல பயணிகளின் கனவாக உள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட டூரிஸ்ட் சர்க்யூட்டுகள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் குறைவாக அறியப்பட்ட புரிதல் கொண்ட இடங்களாகும்.

இந்த டூரிஸ்ட் சர்க்யூட் படி சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களை ஆராய்வது மட்டுமல்லாமல், அருணாச்சல பிரதேசத்தின் வளமான கலாச்சாரம், நடனம், உணவு, இசை மற்றும் பல அம்சங்களையும் ஆராய்வார்கள்.இந்த வாய்ப்பின் மூலம், பயணிகள் வடகிழக்கு மாநிலத்தின் சாராம்சத்தை நன்கு அனுபவிக்க முடியும்.

arunachalpradeshnewtouristcircuit2

இந்தியாவில் மிகக் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக, இது அருணாச்சலப் பிரதேசத்தின் உள்ளூர் சுற்றுலா மட்டுமின்றி சக மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காகவும், அப்பகுதியின் பாதுகாப்பைப் பூர்த்தி செய்வதற்காகவும், திராப் மற்றும் லாங்டிங் மாவட்டங்களின் காவல்துறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தின் திறனை அதிகரிக்குமாறு அருணாச்சலப் பிரதேச அரசாங்கத்தை உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளால் போதுமான அளவு கண்காணிக்கப்பட வேண்டும்" என்று உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த இரண்டு மாவட்டங்களின் இதுவரை அறியப்படாத, ஆராயப்படாத இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும். இது உள்ளூர் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும். சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியின் மயக்கும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் உணவு வகைகளை அனுபவிக்க முடியும்" என்று அருணாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தி சுற்றுலாப் பயணிகளிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் என்ற வேறுபாடின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளனர். எனவே, ஒரு நல்ல முடிவின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+