Search
  • Follow NativePlanet
Share
» »2 மணி நேரமாக பயணத்தை குறைக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை திறப்பு ஒத்திவைப்பு!

2 மணி நேரமாக பயணத்தை குறைக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை திறப்பு ஒத்திவைப்பு!

இந்த சாலை திறக்கப்பட்டதும் சென்னையிலிருந்து வெறும் இரண்டே மணி நேரத்தில் மக்கள் பெங்களூருவை அடைந்திடலாம்! சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையை இந்த ஆண்டு டிசம்பருக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்து இருந்தார். ஆனால், இந்த விரைவுச்சாலை திறக்க இன்னும் கால தாமதம் அகும் என தற்போதைய தகவல் கூறுகிறது!

இரண்டு மணி நேரத்தில் பெங்களூரு பயணம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை கூடிய விரைவில் திறக்கப்படவுள்ளது. புதிய கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை திறப்பு விழாவுக்குப் பிறகு பெங்களூரு-சென்னை இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரமாக குறைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் அறிவித்தார்! சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக மாநிலத்தில் சுமூகமான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நிலம் கையகப்படுத்துவதை உறுதி செய்யுமாறு புதுதில்லியில் நடந்த சந்திப்பின் போது கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை அவர் வலியுறுத்தினார் என்று கட்கரி கூறினார்.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் சாலை

தற்போது, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வழி, பழைய மெட்ராஸ் சாலை மற்றும் கோலார்-கேஜிஎஃப்-வி கோட்டா மற்றும் வேலூர் மார்க்கம் உட்பட, சென்னை மற்றும் பெங்களூரு இடையே பயணிக்க மூன்று மாற்று வழிகள் உள்ளன. ஆனால், எதில் சென்றாலும் இரு நகரங்களுக்குமான பயண நேரம் 5-6 மணி நேரம் ஆகும். புதிய விரைவுச் சாலை பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான தூரத்தை 300 கி.மீ லிருந்து 262 கி.மீ ஆக குறைத்து, பயண நேரத்தை 2-3 மணி நேரமாகக் குறைக்கும். இது பயண நேரத்தை குறைப்பது மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

construction work getting delayed

இது எந்தெந்த நகரங்கள் வழியாக செல்கிறது

ஹோஸ்கோட், கர்நாடகா

மாலூர், கர்நாடகா

வி கோட்டா, ஆந்திரப் பிரதேசம்

பலமனேர், ஆந்திரப் பிரதேசம்

குடியாத்தம், தமிழ்நாடு

அரக்கோணம், தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர், தமிழ்நாடு

டிசம்பர் 2024 இல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு

262 கிமீ நீளமுள்ள பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை ரூ.16,730 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. புதிய நான்கு வழி பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை, அரசாங்கத்தின் 26 புதிய பசுமை விரைவுச் சாலைகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த புதிய பசுமை விரைவுச் சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி 2022 மே மாதம் அடிக்கல் நாட்டினார். இந்த விரைவுச் சாலை 2024 டிசம்பரில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று கூறப்பட்ட நிலையில் இது இப்போது தாமதமாகும் என்று தெரிய வந்துள்ளது.

2025 இல் பயன்பாட்டுக்கு வரும் விரைவுச்சாலை

262-கிமீ நீளமுள்ள பெங்களூர்-சென்னை விரைவுச்சாலை முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால், இன்னமும் கர்நாடகா மாநிலம் உள்ளே வரும் சாலையில் பணிகள் முடிக்கப்படவில்லை. இதற்கான டார்கெட் மிஸ் ஆகி உள்ளது. இதனால் கண்டிப்பாக சாலை 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் திறக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் இந்த சாலை திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

More News

    Read more about: chennai news tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+