Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையின் மிகப்பெரிய ‘லூலு மால்’ கோயம்பேட்டில் திறக்கப்படவில்லையாம் – ECR இல் தான் வருகிறதாம்!

சென்னையின் மிகப்பெரிய ‘லூலு மால்’ கோயம்பேட்டில் திறக்கப்படவில்லையாம் – ECR இல் தான் வருகிறதாம்!

சென்னையிலேயே மிகப்பெரிய மால் ஒன்று திறக்கப்படவுள்ளது, உலக அளவில் மிகவும் பேமஸ் ஆன 'லூலு மால்' விரைவில் சென்னைக்கு வரப் போகிறது. இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விரைவாக காலி செய்து தர ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், சவுதி அரேபியாவை மையமாக கொண்ட மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அதாவது லூலூ மால் வரப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன! ஆனால் தற்போது கோயம்பேட்டில் லூலு மால் கட்டப்படவில்லையாம், அது ECR சாலையில் தான் வரவுள்ளது!

சென்னையின் மிகப்பெரிய மால்

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட லுலு குழுமம் நகரத்தில் ஒரு பெரிய வணிக வளாகத்தை நிறுவ மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. லுலு மாலுக்கு வழிவகை செய்யும் வகையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை மொஃபுசில் பேருந்து நிலையம் காலி செய்யப்பட்டதாக வெளியான செய்தியை, அது ஆதாரமற்ற வதந்தி என்று தமிழக அரசு புறக்கணித்தது.

பொய் செய்தி பரப்ப வேண்டாம்

தமிழக அமைச்சர் பி.கே.சேகர் பாபு கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஒரு பெரிய விஷயம் திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் முதல்வர் மூலம் தெரியவரும் என்றும் சூசகமாகத் தெரிவித்தார். இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தை அரசு காலி செய்து அந்த இடத்தில் லுலு மால் கட்ட அனுமதி வழங்குவதாக சில அரசியல் கட்சிகளும், இணையதள ஊடகங்களும் அறிவித்தன.

chennaibiggestlulumall

புதிதாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட்

கோயம்பேடு பேருந்து நிலையத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க வேண்டும் என்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை புதிதாக கட்டப்பட்ட வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றியது தமிழக அரசு. அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, கும்பகோணம், நாகர்கோயில், இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்க ஆரம்பித்தன.

ECR சாலையில் திறக்கப்படவுள்ள லூலு மால்

இந்த நிலையில்தான் பாஷ்யம் குழுமத்துடன் இணைந்து ECR இல் லூலூ மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்கே இருக்கும் பிரார்த்தனா தியேட்டர் சமீபத்தில் பாஷ்யம் மூலம் வாங்கப்பட்டது. கூகுளின் மேப்ஸ் பக்கத்தில் இது உறுதி செய்யப்பட்டு லூலூ மாலும் பின் செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் அந்த திறந்தவெளி தியேட்டர் இடிக்கப்பட்டது. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில், 29 ஏக்கர் நிலம், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, இடிக்கும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.550 கோடிக்கு மேல் என்று ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கூடிய விரைவில் லூலு மால் திறக்கப்படும் என்றும் கிட்டத்தட்ட 2000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

More News

Read more about: chennai tamilnadu news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+