• Follow NativePlanet
Share
» »சென்னை ஏர்போர்ட்டில் தூங்கும் பாட் வசதிகள் – இனி காத்திருக்கும் நேரத்தில் சற்று தூங்கவும் செய்யலாம்!

சென்னை ஏர்போர்ட்டில் தூங்கும் பாட் வசதிகள் – இனி காத்திருக்கும் நேரத்தில் சற்று தூங்கவும் செய்யலாம்!

சென்னை விமான நிலையப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி! குறிப்பாக டிரான்ஸிட் மற்றும் நீண்ட நேர நிறுத்தம் இருக்கும்போது பயணிகள் அமர்ந்தே இருக்க வேண்டிய சூழலில் இருப்பார்கள். ஆனால், தூங்குவது அவ்வளவு சாமானிய விஷயமாக இருக்காது.

இனி, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுகமான உறக்கத்தை அனுபவிக்க முடியும், அதற்கு வழி இப்போது பிறந்துவிட்டது. ஆம்! 'ஸ்லீப்ஸோ' எனப்படும் ஸ்லீப்பிங் பாட் வசதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாட் ஹோட்டல்கள் என்றால் என்ன?

பாட் ஹோட்டல்கள் என்றால் என்ன?

காப்ஸ்யூல் ஹோட்டல், பாட் ஹோட்டல் என்று அழைக்கப்படும் இது ஒரு மலிவு விலை தங்குமிடமாகும். பாட் ஹோட்டல்கள் முதன் முதலில் ஜப்பானில் தான் துவங்கப்பட்டது. பெட்ஷீட், தலையணை, சார்ஜ் செய்யும் வசதி, லாக்கர் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உடன் கூடிய ஒரு சிறிய படுக்கையறை தான் பாட் ஹோட்டல்கள்.

ஒவ்வொரு அறையும் கதவுகள் மற்றும் திரைச்சீலைகளால் மூடப்பட்டு இருக்கும். இது பரப்பளவில் மிகவும் பெரிதாக இருக்காது. ஆனால் சிறிது நேரம் பயணத்திற்கு முன்போ அல்லது பின்போ காத்திருக்கும் வேலையில் ஓய்வெடுக்க மிகவும் வசதியாக இருக்கும்.

இந்தியாவில் பாட் ஹோட்டல்கள்

இந்தியாவில் பாட் ஹோட்டல்கள்

இந்தியாவில் முதல் முறையாக மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் தான் பாட் ஹோட்டல்கள் துவங்கப்பட்டன. மும்பையில் உள்ள பாட் ஹோட்டல் பயனர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது, மும்பையில் ஒற்றைப் படுக்கைகள் கொண்ட 30 பாட்களும், இரட்டை படுக்கைகள் 6 பாட்களும், குடும்பங்களுக்கான நான்கு பாட்களும் உள்ளன. மும்பையைத் தொடர்ந்து புனேவிலும் விரைவில் டெண்டர் விடப்பட்டு பாட் ஹோட்டல்கள் தொடங்கப்படும் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பாட் வசதி

சென்னை விமான நிலையத்தில் பாட் வசதி

சென்னை விமான நிலையத்தின் இயக்குனர் டாக்டர் ஷரத் குமார், பயணிகளின் நலனுக்காக விமான நிலையத்தினுள் வசதியான மற்றும் முழுமையான தூக்க காய்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இது உள்நாட்டு முனையத்தின் வருகை பிரிவில், பேக்கேஜ் பெல்ட் எண் 1 க்கு அருகில் உள்ளது. பயணிகள் மணிநேர அடிப்படையில் ஒரு பாட் வாடகைக்கு எடுக்கலாம். இதற்கான ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்ள பாட்களில் வசதியான படுக்கைகள், USB சார்ஜர்கள், லக்கேஜ் இடங்கள், கண்ணாடிகள், வாசிப்பு விளக்குகள் மற்றும் காப்ஸ்யூல்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு காப்ஸ்யூலும் ஒரு பெரியவர் மற்றும் 12 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைக்கு இடமளிக்கும் திறன் கொண்டது.

இனி நீங்களும் தங்கலாம் “ஸ்லீப்ஸோ”வில்

சென்னை விமான நிலையம் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் அக்கவுண்டில் தூங்கும் பாட்களின் படங்களைப் பகிர்ந்துள்ளது. விமான நிலையம் காய்களின் திறப்பு விழாவின் புகைப்படத்தையும், அதைத் தொடர்ந்து காப்ஸ்யூல்களின் படங்களையும் பகிர்ந்துள்ளது.

"பயணத்தில் கொஞ்ச நேரம் உறங்குங்கள்! உள்நாட்டு வருகையில் ஸ்லீப்பிங் பாட் வசதி (கேப்ஸ்யூல் ஹோட்டல்) தொடங்கப்பட்டதன் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் இப்போது வசதியாக சிறிது நேரம் தங்கலாம். இது போக்குவரத்து பயணிகள் ஓய்வெடுக்கவும், பயணத்தின்போது ஓய்வெடுக்கவும் பெரிதும் பயனளிக்கும்" என்று அந்த ட்வீட்டில் தெருவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களுடைய மீதமுள்ள பயணங்களைத் தொடரும் முன், தேவையான ஓய்வு எடுப்பதில், தங்களுடைய ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள இது நிச்சயமாக உதவும்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+