Search
  • Follow NativePlanet
Share
» »இதற்காக தான் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை காலி பண்ணாங்களா – மிகப்பெரிய மால் வரப் போகுதாமே!

இதற்காக தான் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை காலி பண்ணாங்களா – மிகப்பெரிய மால் வரப் போகுதாமே!

சென்னை புறநகர் பேருந்து நிலையமாக இயங்கி வந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில் (CMBT) இருந்து தென் தமிழக மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் (KCBT) இருந்து செல்கின்றன. இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விரைவாக காலி செய்து தர ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், சவுதி அரேபியாவை மையமாக கொண்ட மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அதாவது லூலூ மால் வரப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன!

சென்னையின் புதிய பஸ் ஸ்டாண்ட்

கோயம்பேடு பேருந்து நிலையத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க வேண்டும் என்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை புதிதாக கட்டப்பட்ட வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றியது தமிழக அரசு. அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, கும்பகோணம், நாகர்கோயில், இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்க ஆரம்பித்தன.

biggestevermallinchennai1

புதிய பேருந்து நிலையத்தை வரவேற்காத மக்கள்

கோயம்பேடு போல அல்லாமல், கிளாம்பாக்கம் சென்னையில் இருந்து வெகுதூரத்தில் உள்ளதால், வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் இணைப்பு இல்லாததாலும், புறநகர் ரயிலில் நிறுத்தம் இல்லாததாலும் கிளாம்பாக்கம் வருவதற்கும் போவதற்கும் பஸ் அல்லது வாடகை கார், ஆட்டோக்களையே பயணிகள் நம்பி இருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிறுத்தம், கிளாம்பாக்கம் மெட்ரோ என பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

CMBT காலியாகும் அபாயமா

சென்னையில் லூலூ மாலுக்கு இடமளிக்கும் வகையில் தான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதற்காகத் தான் விரைந்து காலி செய்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்துள்ளது. பல செய்தி நிறுவனங்களும் இது உண்மை தான் என்று கூற ஆரம்பித்தன.

biggestevermallinchennai

இது உண்மை தகவல் அல்ல - தமிழக அரசு

லூலூ மால் கட்டுவதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை மொஃபுசில் பேருந்து நிலையம் காலி செய்யப்படுவதாக வெளியான செய்தி ஆதாரமற்ற வதந்தி என்று தமிழக அரசு மறுத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட லுலு குழுமம் நகரத்தில் ஒரு பெரிய வணிக வளாகத்தை நிறுவ மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது உண்மை தான். ஆனால் அது கோயம்பேட்டில் அல்ல என்று தமிழக அரசு கூறியுள்ளது.

சென்னை ECR இல் லூலூ மால்

இந்த நிலையில்தான் பாஷ்யம் குழுமத்துடன் இணைந்து ECR இல் லூலூ மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்கே இருக்கும் பிரார்த்தனா தியேட்டர் சமீபத்தில் பாஷ்யம் மூலம் வாங்கப்பட்டது.. அந்த திறந்தவெளி தியேட்டர் இடிக்கப்பட்டது. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில், 29 ஏக்கர் நிலம், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, இடிக்கும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது. கிட்டத்தட்ட 2000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

More News

    Read more about: chennai malls
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+