Search
  • Follow NativePlanet
Share
» »தென் மாவட்ட பயணிகளுக்காக சென்னை-நாகர்கோவில் மற்றும் சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

தென் மாவட்ட பயணிகளுக்காக சென்னை-நாகர்கோவில் மற்றும் சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் தடம் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்கும் வகையில், வரும் பூஜை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எதிர் வரும் பூஜை பண்டிகையின் போது கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரயில்வே இத்தகைய முடிவை எடுத்துள்ளது!

சென்னையிலிருந்து விழாக் காலங்களில் சொந்த ஊர் பயணிக்கும் மக்கள்

சென்னை தமிழக தலைநகராக நவீனமும், கலாச்சாரமும் நிறைந்த ஒரு பெருநகரமாக மட்டுமல்லாமல், வந்தாரை வாழ வைக்கும் சென்னையாக பல லட்ச மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வருகிறது. பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் சென்னையில் தங்கி வேலை பார்க்கும் பல லட்ச மக்களும் தங்களின் சொந்த ஊர்கள் நோக்கி படையெடுடுக்கின்றனர். எவ்வளவு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கினாலும் போதுமானதாக இருப்பது இல்லை. இருப்பினும், தென்னக ரயில்வே ஒரு சூப்பர் முடிவை எடுத்துள்ளது.

சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள தென்னக ரயில்வே

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில், ரயில் எண் 06178 அக்டோபர் 9, 2024 அன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

chennai-nagarcoilspecialtrain

நாகர்கோவில்-சென்னை சென்ட்ரல் ஃபெஸ்டிவல் சிறப்பு ரயில்

மறு மார்க்கமாக, ரயில் எண் 06179 அக்டோபர் 10, 2024 (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.25 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை சென்றடையும். இந்த ரயிலுக்கு நாகர்கோவில்-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஃபெஸ்டிவல் சிறப்பு ரயில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடி ஃபெஸ்டிவல் சிறப்பு ரயில்

அதே போல, ரயில் எண் 06186 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடி ஃபெஸ்டிவல் சிறப்பு ரயில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 8, 2024 அன்று (செவ்வாய்கிழமை) இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறு மார்க்கமாக, ரயில் எண் 06187 தூத்துக்குடி-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஃபெஸ்டிவல் சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து அக்டோபர் 9, 2024 (புதன்கிழமை) அன்று மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 08.55 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட்டுகளை பின்வரும் முறைகள் மூலம் முன்பதிவு செய்யலாம்.

IRCTC மூலம் ஆன்லைனில்

1. அதிகாரப்பூர்வ IRCTC இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது IRCTC மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தவும்.

2. உள்நுழையவும் அல்லது கணக்கை உருவாக்கவும்.

3. ரயில் எண்ணை உள்ளிடவும் (சென்னையில் இருந்து நாகர்கோவில் 06178) அல்லது சென்னை சென்ட்ரல் (MAS) மற்றும் நாகர்கோவில் சந்திப்பு (NCJ) இடையே உள்ள ரயில்களைத் தேடுங்கள்.

4. உங்களுக்கு விருப்பமான ரயில், வகுப்பு மற்றும் பயணத் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.

5. உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்த, கட்டணத்தைத் தொடரவும்.

ரயில்வே முன்பதிவு கவுன்டர்கள்

ரயில் எண், பயண தேதி மற்றும் பயணிகள் விவரங்களை வழங்குவதன் மூலம் எந்த ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டரிலும் நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

திருவிழாக் காலங்களில் அதிக தேவை இருப்பதால் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை உறுதி செய்யவும்

More News

    Read more about: chennai news nagarcoil
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+